Leo Trailer: லியோ டிரெய்லர் வெளியான போது ரோகிணி திரையரங்கில் குவிந்த ரசிகர்கள் தியேட்டரின் இருக்கைகளை அடித்து நொறுக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


வழக்கமாக விஜய் படம் ரிலீசாக இருந்தால், படத்தின் டிரெய்லர் மற்றும் டீசர் சென்னையில் இருக்கும் ரோகிணி திரையரங்கில் பிரமாண்ட திரையில் வெளியிடப்படுவது வழக்கம். அப்போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விஜய் படத்தின் டிரெய்லரை கொண்டாடி வந்தனர். அதேபோல், லியோ படத்தின் டிரெய்லர் ரோகிணி திரையரங்கில் பிரமாண்டமாக ஒளிபரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 


ஆனால், காவல்துறையின் பாதுகாப்பு அறிவுறுத்தலால் ரோகிணி தியேட்டரில் லியோ டிரெய்லர் வெளியிடப்படாது என தியேட்டர் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. எனினும், இன்று மாலை லியோ ட்ரைலர் ரிலீசாவதை ஒட்டி ரோகிணி திரையரங்கில் குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், போலீசாரின் தடுப்புகளையும் மீறி தியேட்டர்க்குள் நுழைந்து அங்கிருந்த இருக்கைகளை அடித்து நொறுக்கினர். இதனால், போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 






லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். லியோ படம் அறிவிக்கப்பட்டத்தில் இருந்து அதன் ஒவ்வொரு அப்டேட்களையும் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். லியோ படத்தின் முதல் லிரிக்ஸ் பாடலான நான் ரெடி தான், விஜய், அர்ஜூன் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்டோரின் கிளிம்ப்ஸ் புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டானது. 


கடந்த மாதம் 30ம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அது நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.  எனினும், லியோ படத்தின் இரண்டாவது பாடலான படாஸ் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அடுத்ததாக லியோ படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலருடன் காத்திருந்த நிலையில் லியோ படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியானது. 


அதில், விஜய்யின் குரலில்‘ ஒரு சீரியல் கில்லர் நடு ரோட்டில் நின்று கொண்டு பார்க்கும் எல்லோரையும் கொல்றான். அவனை ஒரு சின்சியரான போலீஸ் அதிகாரி திருப்பி சுட..அந்த துப்பாக்கி அவன் கையில் இருக்கு... நீ என்ன செய்வ? காட்சிகள் இடம்பெற்றுள்ளன. டிரெய்லரின் வன்முறை காட்சிகளுடன், ” எவனோ ஒரு.... என்னை போல இருக்கான்னு ஆளாளுக்கு என்னை போட்டு உயிரை எடுத்தால் நான் என்ன பன்ணுவேன்” என கோபத்துடன் த்ரிஷாவை பார்த்து விஜய் கேட்கும் காட்சி இடபெற்றுள்ளது.