LEO Trailer: அறுவடைக்கு தயார்! பேட் வோர்ட் பேசி கதறும் விஜய் - ரத்தம் சொட்ட சொட்ட வெளியானது லியோ டிரெய்லர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்தின் அதகளமான டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது

Continues below advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

Continues below advertisement

லியோ

‘மாஸ்டர்’  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் லியோ.  பொதுவாகவே விஜய் படத்தின் கதை எந்த மாதிரியானதாக இருக்கும் என்று ரசிகர்களுக்கு ஒரு யூகம் இருக்கும். ஆனால் லியோ திரைப்படத்தைப் பொறுத்தவரை ரசிகர்களால் எந்தவித தீர்மானத்திற்கு வர முடியவில்லை!

முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் சோம்பேறித்தனமான மது அடிக்‌ஷன் உடைய நபராக நடித்திருந்தார். இந்த முறை லியோ திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் முழுவதும் சீரியசான ஒரு லுக்காக இருப்பதால் விஜய் எந்த மாதிரியான ஒரு கதாபாத்திரமாக இருப்பார் என்று ரசிகர்களால் சொல்ல முடியவில்லை.

கதாபாத்திரங்கள்

மேலும் பிரபல இயக்குநர்கள் முதல் நடிகர்கள் வரை பலரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பதால் இவர்களின் கதாபாத்திரத்தை லோகேஷ் கனகராஜ் எப்படி பயன்படுத்தி இருக்கிறார் என்பது ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கிறது! இந்நிலையில், இன்று லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகி விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

 

லோகேஷ் கனகராஜின் ஸ்டைலில் ஒரு குட்டிக் கதையில் இருந்து தொடங்குகிறது இந்த டிரெய்லர். இந்த கதையை விஜய் தனது மகளிடம் சொல்கிறார். தனது மனைவி த்ரிஷா மற்றும் மகளுடன்  நிம்மதியாக அமைதியான முறையில் வாழ்ந்து வரும் பார்த்திபன் (விஜய்) மிகப்பெரிய ஒரு கேங்ஸ்டர் கும்பலால் துரத்தப்படுகிறார். லியோ தாஸ் என்பவர் போல் இருப்பதால் பார்த்திபனைத் துரத்துகிறது இந்த கொலைகார கும்பல். தனது குடும்ப்பத்தை காப்பாற்றிக் கொள்ள அமைதியான தனது சுபாவத்தை விட்டு வெறிப்பிடித்த அவதாரம் எடுக்கிறார் விஜய். 

ஹைலைட்ஸ்

லியோ திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களை மிரளவைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒட்டுமொத்த ரசிகர்களும் திரையரங்கத்தில் பார்க்க காத்திருக்கும் ஒரு காட்சி என்றால் கழுதைப் புலியுடன் விஜய் சண்டை போடும் போஸ்டரில் இடம்பெற்ற காட்சிதான். ஏற்கெனவே படத்தை பார்த்த பிரபலங்கள் இந்தக் காட்சி குறித்த பில்டப் கொடுத்து வைத்திருக்கிறார்கள்.

விஜய்யின் எண்ட்ரி

விஜய் படங்களில் அவருக்கும் இண்ட்ரோ காட்சி வைப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. இந்த சவாலை மாஸ்டர் படத்தில் மிகத் திறமையாகவே கையாண்டார் லோகேஷ் கனகராஜ். தற்போது லியோ படத்தில் விஜய்யின் இண்ட்ரோ காட்சி மாஸ்டரை விட பலமடங்கு பிரமாண்டமாக இருக்கப்போகிறது என்பது உறுதி!

இடைவேளை

எப்படி படத்தின் ஓப்பனிங் சிறப்பாக இருக்க வேண்டுமோ அதேபோல் தான் இடைவேளையும். விஜய் படங்களில் அதிகம் ரசிக்கப்பட்ட இண்டர்வல் காட்சி என்றால் ‘துப்பாக்கி’ படத்தில் வரும் ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என்கிற காட்சிதான். மாஸ்டர் படம் வரை இதே வசனத்தைதான் பயன்படுத்தி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த முறை என்ன புதிதாக செய்யப் போகிறார் பார்க்கலாம்.

லியோ டிரெய்லர்

இந்நிலையில், படம் வெளியாக இன்னும் 14 நாள்களே உள்ள சூழலில், லியோ டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola