கரூரில் தவெக அரசியல் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து விஜய் மூன்று நாட்களுக்கு பின் வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் விஜய் பேசியிருப்பதால் அவரது சொந்த ரசிகர்களே பெரும் அதிருபதிக்கு உள்ளாகியுள்ளார்கள். விஜய் ரசிகனாக இருப்பதற்கு வெட்கப்படுவதாக பலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
விஜய் வீடியோவால் ரசிகர்கள் அதிருப்தி
தனது கட்சி பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் மக்கள் சிக்கி அவதிப்படுத்வதைக் கண்ட விஜய் உடனே விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தது பெரியளவில் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இன்னொரு பக்கம் தவெக தொண்டர்கள் சதிக் கோட்பாடுகளின் அடிப்படையில் பிரச்சனையை அரசு பக்கம் திசை திருப்பி வந்தனர். மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் உயிரிழந்தோரின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து வந்தபோதும் விஜய் கரூர் செல்லாதது அவரது ரசிகர்கள் மத்தியில் விவாதப் பொருளானது.
இப்படியான நிலையில் நேற்று விஜய் வீடியோ வெளியிட்டார். 41 பேர் உயிரிழந்தது குறித்து தனது வருத்தத்தை மட்டும் தெரிவித்துவிட்டு விஜய் தன்னையே பாதிக்கப்பட்டவராக வெளிக்காட்டிக் கொண்டார் . மேலும் மற்ற பரப்புரையின் போது நடக்காத அசம்பாவிதம் கரூரில் மட்டும் எப்படி நடந்தது என மறுபடியும் பிரச்சனையை திமுக பக்கம் திருப்பி விடும் விதமாக அவரது பேச்சு அமைந்தது. விஜயின் இந்த வீடியோ வெளியான பின் அவரது சொந்த ரசிகர்களே தங்களது அதிருப்தியை சமூக வலைதளத்தில் வெளிகாட்ட தொடங்கியுள்ளார்கள். விஜயின் ரசிகர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருப்பதாக பலர் பதிவிட்டு வருகிறார்கள்.