சமீபத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து முடிந்தது. இந்திய அணி கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது என்றால் நாடே ஆர்வத்துடன் பார்த்து ரசிப்பார்கள். ஆனால், துபாயில் நடந்த ஆசிய கோப்பைத் தொடர் 2000ம் ஆண்டுக்கு இந்திய அணி ஆடிய கிரிக்கெட் தொடரில் மிக குறைவான பார்வையாளர்களை கொண்ட மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக இந்த தொடரை குறிப்பிடலாம். 

Continues below advertisement


விராட், ரோகித் இல்லாத இந்தியா:


இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் ஆடியும் இந்த தொடர் ரசிகர்களை கவரவில்லை. இந்தியாவில் பெரும்பாலான ரசிகர்கள் இந்த தொடரை பார்க்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் இந்திய கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார்களான விராட் கோலியும், ரோகித்சர்மாவும் ஆடாததே ஆகும். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இவர்கள் இருவரும் விளையாடததான் எதிரொலி டிஆர்பியில் எதிரொலித்தது. 


பார்த்திபனாக வாழும் விராட் கோலி:


இந்த நிலையில் இவர்கள் இருவரும் அக்டோபர் மாதத்தில் நடக்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆட உள்ளனர். குறிப்பாக, ஐபிஎல் தொடர் வெற்றிக்கு பிறகு விராட் கோலி கிரிக்கெட்டிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல வாழ்ந்து வருகிறார். லண்டனில் தனது மனைவி அனுஷ்கா மற்றும் குழந்தைகளுடன் சாதாரணமாக வாழ்ந்து வருகிறார் விராட் கோலி. 


அதாவது, லியோ படத்தில் மிகப்பெரிய கேங்ஸ்டரான லியோ விஜய் தனது பெயரை மாற்றிக் கொண்டு தனது மனைவி, குழந்தைகளுடன் பார்த்திபனாக வாழ்ந்து வருவார். அதேபோல, விராட் கோலி தற்போது லண்டனில் உலா வருகிறார். இணையதளத்தில் அவ்வப்போது அவரது புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி அவரது ரசிகர்கள உற்சாகப்படுத்தி வருகிறது. 


அக்டோபர் 19ம் தேதிக்காக காத்திருப்பு:


இந்த நிலையில், விராட் கோலியின் ரசிகர்கள் கிரிக்கெட்டின் அரசன் அக்டோபர் 19ம்  தேதி பெர்த் மைதானத்தில் கால் பதிக்க உள்ளான் என்று அவரது வருகையை போற்றும் விதமாக வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர். விராட் கோலியும், ரோகித் சர்மாவும் டி20 உலகக்கோப்பை வென்ற கையுடன் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இவர்கள் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது ஓய்வை அறிவித்தனர். 


2027ம் ஆண்டு உலகக்கோப்பை ஒருநாள் போட்டி வரை இவர்கள் இருவரும் ஆடுவார்கள் என்று கருதப்படுகிறது. 2027 உலகக்கோப்பை வெற்றியுடன் இவர்கள் இருவரும் விடைபெற வேண்டும் ரசிகர்கள் விரும்புகின்றனர். 


2027 உலகக்கோப்பை:


இந்த நிலையில், இந்திய அணி அடுத்த உலகக்கோப்பை வரை சுமார் 35 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், விராட் கோலி மற்றும் ரோகித்சர்மா இருவரும் அதிகபட்சம் உலகக்கோப்பை வரை சேர்த்து 45 முதல் 50 போட்டிகள் வரை மட்டுமே விளையாட உள்ளனர். அதேசமயம், கம்பீர் வருகைக்கே பிறகு இவர்கள் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதால் ஒருநாள் போட்டியிலும் நீடிப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 


விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இந்திய அணிக்காக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் ஆகிய 3 வடிவத்திலும் தவிர்க்க முடியாத வீரர்களாக இருந்ததுடன் பல சாதனைகளை படைத்துள்ளனர்.