கரூர் சம்பவம் பற்றி சந்தோஷ் நாராயணன் 

விஜயின் தவெக பரப்புரையின் போது கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement

" கரூர் கூட்ட நெரிசலில் அப்பாவி உயிர்கள் இழந்தது என்னை தனிப்பட்ட அளவில் மிகவும் பாதித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் இந்த மன்னிக்க முடியாத துயரத்தை எதிர்கொண்டு அமைதியைக் காண மனதார வேண்டிக் கொள்கிறேன். இந்த கொடூரமான நிகழ்வின் காயம், கோபம் மற்றும் உதவியற்ற தன்மையிலிருந்து என்னை மீட்டெடுக்க எனக்கு சிறிது நேரம் தேவைப் பட்டது.  எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனது நேர்மையான தனிப்பட்ட கருத்தில்,  அதிகாரத்திற்கான இடைவிடாத பசி, புகழுக்க்காக மக்களை ஏமாற்றுவது , அதிகாரத்திற்கான பேய் தாகம் மற்றும் அதன் மூலம் கிடைக்கும்  செல்வங்களுக்கான தாகம் ஆகியவையே நம்மை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.   நாம் அனைவரும்  ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து ஒளிவுமறைவில்லாத ஒரு அரசியல் சூழலை உருவாக்காத வரை இந்த நிலை தொடரவே செய்யும். இன்றைய டிஜிட்டல் உலகில், இது சாத்தியமானது. அந்த நிலையை அடையும் வரை, நமக்குள் பிளவுபட்ட கருத்துக்களை நாம் வைத்துக்கொண்டே இருப்போம். இந்த துயரத்தில் இழந்த  அப்பாவி ஆன்மாக்கள் சாந்தியடையட்டும். தயவுசெய்து உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் - நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன், உங்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் அமைதிக்காக நான் பிரார்த்திக்கிறேன்." என சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார்

கரூர் கூட்ட நெரிசல் குறித்து தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் இதுவரை வாய்திறக்காத நிலையில் முன்னணி இசையமைப்பாளரான் சந்தோஷ் நாராயணன் இச்சம்பவம் குறித்து  பதிவிட்டுள்ளது பாராட்டத் தக்கது.