Vijay Heroine: ஒரே ஒரு படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகை! இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?
Vijay Heroine: 90களில் விஜய் ஹீரோயினாக இருந்த மோனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
Continues below advertisement

விஜய் பட நடிகை மோனிகா
Vijay Heroine: விஜய் நடித்த மின்சார கண்ணா பட்டத்தில் நடித்த மோனிகாவுன் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதால் அவரா இவர் என நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மின்சார கண்ணா ஹீரோயின்:
1999ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மின்சார கண்ணா. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து குஷ்பு, ரம்பா, மோனிகா, மணிவண்ணன், மன்சூர் அலிகான், அனுமோகன், சுந்தரராஜன், கோவை சரளா என பலர் நடித்திருப்பார்கள். காமெடி, பாடல், காதல் என அனைத்திலும் ஸ்கோர் செய்த படம் மின்சார கண்ணா.
படத்தில் ஆண்களை வெறுக்கும் கேரக்டரில் குஷ்பு நடித்திருப்பார். அவரது தங்கையான மோனிகாவை காதலிக்கும் விஜய் தனது குடும்பத்துடன் குஷ்பு வீட்டில் தங்கி இருந்து, அவரது மனதை மாற்றுவது படத்தின் கதையாக இருக்கும். இந்த படத்தில் விஜய்க்கு அப்பாவாக கே.எஸ். ரவிக்குமார் நடித்திருப்பார். படத்தில் விஜய் கோடீஸ்வரரின் மகனாக நடித்திருப்பார். படத்தில் நடித்த மோனிகாவுக்கு வரவேற்பு இருந்தது.
வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்:
மோனிகா அடுத்தத்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க முடியாமல் போனது. மோனிகா எங்கே சென்றார் என்ற தகவலும் இல்லாமல் இருந்தது. சில ஆண்டுகளுக்கு பிறகு இந்தி சீரியல்களில் நடித்து வந்த மோனிகா, சத்யபிரகாஷ் சிங் என்ற துணை இயக்குநரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாட்டால் கணவரை ஒரே ஆண்டில் பிரிந்துள்ளார் மோனிகா.
இந்த நிலையில் 90களில் விஜய் ஹீரோயினாக இருந்த மோனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. தொடர்ந்து இந்தி சீரியகளில் காமெடி மற்றும் முக்கிய ரோல்களில் நடித்து வரும் மோனிகா அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
Continues below advertisement
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.