Feb 9th Movie Releases: சூப்பர் ஸ்டாருடன் மோதும் குட்நைட் மணிகண்டன்: நாளை ரிலீசாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
New Movie Release: கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டு, அதை சார்ந்து அரங்கேறும் சாதி, மதம் உள்ளிட்டவைகளை பேசும் லால் சலாம் படம் திரைக்கு வருவதால், ரசிகர்கள் ஆர்வம்.
Continues below advertisement

நாளை ரிலீசாகும் படங்கள்
New Movie Release: நாளை ரஜினி நடித்த லால் சலாம், மணிகண்டன் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ்வர் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வருகின்றன.
லால் சலாம்
தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் அடுத்ததாக உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். லால் சலாம் படத்தில் ரஜினியுடன் இணைந்து விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய லீட் ரோலில் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் மொய்தீன் பாய் கேரக்டரில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டு, அதை சார்ந்து அரங்கேறும் சாதி, மதம் உள்ளிட்டவைகளை பேசும் லால் சலாம் படம் திரைக்கு வருவதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
லவ்வர்
அடுத்ததாக, லால் சலாம் படத்துக்கு போட்டியாக நாளை மணிகண்டன் நடித்த லவ்வர் படம் ரிலீசாக உள்ளது. அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கி இருக்கும் படத்தில் மணிகண்டன் லீட் ரோலில் நடித்துள்ளார். காதலில் ஏற்படும் சந்தேகங்களும், காதலர்களின் நம்பிக்கை, ஈரோ, பிரேக்கப், போட்டாபோட்டி உள்ளிட்டவற்றை அழகாக கூறும் படமாக லவ்வர் படம் உருவாகி உள்ளதாக படத்தின் இயக்குநர் வியாஸ் கூறியுள்ளார்.
தெலுங்கு, மலையாளம், பாலிவுட் ரிலீஸ்
தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் உருவாகி இருக்கும் ஈகில் படம் நாளை ரிலீசாக உள்ளது. கார்த்திக் கட்டானேனி இயக்கி இருக்கும் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படம் ரிலீசாக உள்ளது.
மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடித்த அன்விஷிப்பின் கண்டேதும் படமும், பிரேமலு படமும் நாளை ரிலீசாக உள்ளது. இதை தவிர, இந்தியில் தேரி பதோன் மெயின் ஐசா உஜா ஜியா படமும் ரிலீசாக உள்ளது. இந்த படங்கள் மட்டுமில்லாமல், இமெயில் படமும் தமிழில் ரிலீசாக உள்ளது.
Continues below advertisement
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.