Leo BoxOffice Collection: லியோ திரைப்படம் வெளியாகி 7 நாள்களில் ரூ.500 கோடி வசூலானதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவும் நிலையில், மற்றொருபுறம் தியேட்டர்கள் காலியாக இருப்பதாக ஒரு தரப்பு நெட்டிசன்கள் இணையத்தில் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படம் கடந்த 19ஆம் தேதி ரிலீசானது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ், விஜய் இணைந்திருப்பதால் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. படம் ரிலீசான முதல் நாளை விஜய் ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடினர்.


லியோ வெளியான முதல் நாளில் ரூ.64 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.35.25 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.39.8 கோடியும், 4வது நாளில் ரூ.41.55 கோடியும், ஐதாவது நாளில் ரூ.35.7 கோடியும் பாக்ஸ் ஆபிசில் வசூலானதாக சாக்னிக் தளத்தில் செய்தி வெளியானது. ஆனால், லியோ படம் வெளியான முதல் நாளில் ரூ. 148 கோடி வசூலானதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் கிரீன்ஸ் ஸ்டுடியோஸ் அறிவித்திருந்தது. அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை என்பதால் லியோ படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் 6வது நாளில் இந்திய அளவில் லியோ படம் ரூ.249.80 கோடி அளவுக்கு பாக்ஸ் ஆபிசில் வசூலானதாக தகவல் வெளியானது. 


அதைத் தொடர்ந்து ஏழாவது நாளான இன்று, ரூ.15 கோடி வசூலானதாகவும், இதுவரை ரூ.264 கோடியை எட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுகிறது. உலக அளவில் ரூ.450.80 கோடி அளவுக்கு பாக்ஸ் ஆபிசில் லியோ பாடம் கலெக்‌ஷனை அள்ளியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லியோ பாக்ஸ் ஆபிசில் ரூ. 500 கோடியை எட்டியுள்ளதாக தகவல்கள் இணையதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. லியோ ரூ.500 கோடியை எட்டியதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை என்றாலும், விடுமுறை தினம் முடிந்து பல தியேட்டர்கள் காலியாக இருக்கும் நிலையில் லியோ எப்படி பாக்ஸ் ஆபிசில் இன்று 500 கோடிகளை எட்டியது என ரசிகர்கள் விமர்சனங்களை முன் வைக்கின்றனர். 


மற்றொருபுறம் “முதல் நாளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ வசூல் தொகை பற்றி படக்குழு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. படத்தின் ப்ரீபுக்கிங் மூலமாகவே முதல் நாளே லியோ 140 கோடிகளுக்கு மேல் வசூலித்து  சாதனை படைத்தது, அதன் பின் கலைவையான விமர்சனங்கள் காரணமாக படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை, அப்பறம் எப்படி 500 கோடி வசூலை எட்டியது? படக்குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும்” எனவும் ரசிகர்களும் விமர்சகர்களும் இணையத்தில் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.


 






மேலும் படிக்க: Entertainment Headlines: மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய ரஜினிகாந்த்.. லியோ வசூல் நிலவரம்.. இன்றைய சினிமா செய்திகள்!


4 Years Of Kaithi: எல்சியூவின் தொடக்கப்புள்ளி.. ‘கைதி’ வெளியாகி 4 ஆண்டுகள்.. லோகேஷின் புத்திக் கூர்மை இதுதான்!