துர்கா ஸ்டாலின் முதல் தமிழிசை வரை.. ரஜினிகாந்த் வீட்டில் திரண்ட முக்கிய அரசியல் புள்ளிகள்.. என்ன காரணம்?


நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி திருவிழாவில் பல அரசியல் பிரமுகர்கள் ஒன்று கூடிய நிகழ்வு பேசுபொருளாக மாறியுள்ளது.  நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா கோலாகலமாக நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ரஜினிகாந்த் வீட்டில் கொண்டாடப்பட்ட நவராத்திரி விழா பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் படிக்க


லியோ 6 நாளில் ரூ.450 கோடி வசூல்.. விடுமுறை ஓவர், இனியும் தாக்கு பிடிக்குமா விஜய்யின் மந்திரம்?


Leo Day 6 Box Office: விஜய்யின் லியோ திரைப்படம் வெளியான ஆறாவது நாளில், இந்தியாவில் மட்டும் சுமார் 30 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம், முதல் 5 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை கடந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆறாவது நாளில் லியோ திரைப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் 37 கோடி ரூபாயை வசுலித்துள்ளதாக sacnilk இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க


33 வருடத்திற்கு பிறகு... ‘இதயம் சந்தோஷத்தில் துடிக்கிறது’ - அமிதாப்புடன் அழகிய புகைப்படத்தை பகிர்ந்த சூப்பர்ஸ்டார்!


தலைவர் 170 படத்துக்காக மும்பை சென்றிருக்கும் ரஜினி, நடிகர் அமிதாப்பச்சனுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் உடன் 170வது படத்தில் இணைந்துள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபஹத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க


எல்சியூவின் தொடக்கப்புள்ளி.. ‘கைதி’ வெளியாகி 4 ஆண்டுகள்.. லோகேஷின் புத்திக் கூர்மை இதுதான்!


விஜய்யின் ஆக்‌ஷன் த்ரில்லர் மூவியான லியோ, லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் (LCU)ல் ஒரு பாகமா என்பது பற்றி பல மாதமாக விவாதிக்கப்பட்டது. இறுதியில், இது LCU - வின் ஒரு பகுதி என்றும், கைதி (2019) மற்றும் விக்ரம் (2022) ஆகிய படங்களை தொடர்பு கொண்ட மூன்றாவது படம் என்றும் தற்போது விடை கிடைத்துள்ளது. எல்சியூ மூலம் தமிழ் சினிமாவில் யாராலும் செய்ய முடியாததை லோகேஷ் கனகராஜ் செய்தார். அவர் தனது  திரைப்படங்கள் மூலம், தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திரங்களை ஒன்றிணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும் படிக்க


விஜய் - ரஜினி மோதல்.. ரசிகர்களும் விமர்சகர்களும் தமிழ் சினிமாவின் சாபக்கேடா? பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன?


தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்கள் அத்துமீறிச் செல்வது அதிகரித்து இருப்பதும், விமர்சகர்களின் மோசமான கருத்துகளும் திரையுலகின் முன்னேற்றத்தையே தடுக்கும் வகையில் உருவெடுத்துள்ளது. தமிழ் சினிமாக்கள் சமூக மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்குமான பல்வேறு கருத்துகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறது. மேலும் படிக்க


ஜெயிலர் பட வில்லனை தட்டித்தூக்கிய காவல் துறை.. குடி போதையில் இப்படி பண்ணிட்டாரே!


மது போதையில் உள்ளூர் காவல் துறை அதிகாரிகளுடன் நடிகர் விநாயகன் தகராறில் ஈடுபட்டு கைதாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயிலர் படத்தின் மூலம் கோலிவுட்டின் விருப்பமான வில்லனாக உருவெடுத்துள்ளவர் பிரபல மலையாள நடிகர் விநாயகன். தனித்துவமான நடிகர், பாடகர், நடனக் கலைஞர் என கவனமீர்த்து தனக்கென தன் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள விநாயகன், ஜெய்லரில் வர்மன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களையும் ஈர்த்துள்ளார். மேலும் படிக்க