Leo Runtime: லியோ படத்தின் ரன் டைம் இதுதான்.. குஷியில் விஜய் ரசிகர்கள்!
லியோ படம் ரிலீசாக 10 நாட்கள் - இருப்பதால், படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்களும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் லியோ படத்தின் மற்றொரு அப்டேட்டும் தற்போது வெளியாகியுள்ளது.

Leo Runtime: விஜய் நடிக்கும் லியோ படத்தின் ரன் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் நடிக்கும் லியோ படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், மிஷ்கின், கௌதம் மேனன் என பலரும் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது.
ரிலீஸுக்கு முன்னதாக லியோ படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறும் என எதிர்பாக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணம் காட்டி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
Just In




எனினும், கடந்த 5ம் தேதி மாலை 6.30 மணியளவில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் லியோ படத்தின் டிரெய்லர் வெளியானது. படத்தின் ட்ரெய்லரில் ஆபாச வார்த்தை இடம்பெற்றிருந்ததால் லியோ படத்துக்கு எதிராக கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் லியோ படம் ரிலீசாக 10 நாட்களே இருப்பதால், படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்களும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இப்படம் குறித்த மற்றொரு அப்டேட்டும் தற்போது வெளியாகியுள்ளது.
லியோ படத்தின் ரன் டைம் டியூரேஷன் 2.43 மணி நேரம் என்றும் முதல் பாதி 1 மணி நேரம் 13 நிமிடங்கள் 9 நொடிகள் என்றும், இரண்டாவது பாதி படம் ஒரு மணி 30 நிமிடங்கள் 3 நொடிகள் என்றும் தகவல் வெயாகியுள்ளது. முன்னதாக லியோ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்.
கடந்த 5ஆம் தேதி ரிலீசான லியோ படத்தின் ட்ரெய்ரில் ஆபாச வார்த்தை இடம்பெற்றுள்ளதால் லியோ படத்துக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் லியோ படத்தில் இருக்கும் ஆபாச வார்த்தையை நீக்கும்படி வலியுறுத்தபட்டுள்ளது. மேலும் லியோ ட்ரெய்லர் ரிலீசான போது சென்னை ரோகிணி தியேட்டரில் குவிந்த ரசிகர்களால் தியேட்டர் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டன. ஏற்கெனவே செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் லியோ படத்தின் நான் ரெடி தான் மற்றும் Bad ass பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Kamal Haasan - Jovika: உயிரக் கொடுத்து கல்வி அவசியமா.. ஜோவிகா -விசித்ரா சண்டையில் ‘மய்யமாக’ கருத்து சொன்ன கமல்!
Leo Trailer: லியோ படத்தில் ஆபாச வார்த்தை - சீமான் சொன்ன விளக்கம்