கரூரில் 10 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.


 




 


கரூர் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கும் புத்தககண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார். இந்த புத்தக கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


 




பத்து நாட்கள் நடைபெறும் புத்தக திருவிழாவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். புத்தகத் திருவிழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெறும் வகையில் நீதிக்கதைள், கவிதைகள், கட்டுரைகள், முன்னனி எழுத்தாளர்களின் நூல்கள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, தத்துவம், ஆன்மீகம், அகராதி, குழந்தைகளுக்கான நூல்கள், வரலாற்று புத்தகங்கள், அறிவியல் மற்றும் சமூகம், ஆன்மீகம் பெண்களுக்கான அழகுக்குறிப்புகள், சமையல் குறிப்புகள் உள்ளிட்ட சுமார் 10 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் குவிந்துள்ளன. 


 




 


நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் மாலையில் பல்வேறு அறிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர் கலந்துகொண்டு சொற்பொழிவு நிகழ்த்துகின்றனர். அதனைத்தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. புத்தக கண்காட்சி  வரும் 16-ம் தேதி நிறைவு  பெறுகிறது.