அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலான நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் நடித்து வெளிவர இருக்கும் படம் ‘லிகர்’. பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இப்படத்தை எழுதி இயக்கிவுள்ளார். இப்படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Continues below advertisement






குத்துசண்டை வீரராக நடிகர் விஜய்தேவரகொண்டா நடித்துள்ள இந்த படத்தில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதன்மூலம் இந்திய சினிமாவில் அவர் நடிகராக அறிமுகமாகிறார்.






இந்நிலையில் சமீபத்தில் லிகர் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.


“லோகேஷ் யூனிவெர்ஸுடன் நான் இணையும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன். அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன். லோகேஷ், வெற்றிமாறன் சார், பா ரஞ்சித் ஆகியோரின் படைப்புகளை நான் மிகவும் விரும்பி ரசிப்பேன். அவர்கள் அனைவரிடமும் தொலைபேசியில் பேசியுள்ளேன், என்று கூறியுள்ளார்.