ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. மெல்போர்னில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் நடிகை தமன்னா மரகத பச்சை உடையில் வந்து அசத்தினர். தமன்னாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் கூடிய விரைவில் துவங்கவுள்ளது.






படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நட்சத்திரங்களை பற்றிய தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும்  தமன்னா ஆகியோர் ஜெயிலர் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. நடிகை தமன்னா இப்படத்தில் நடிப்பதற்கு  ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி படக்குழுவோடு இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 2019-ல் வெளியான நடிகர் விஷாலின் ஆக்‌ஷன் படத்தில் நடித்த தமன்னா 4 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில்  நடிக்கவுள்ளார். ரஜினி- தமன்னா ஆகிய இருவரும் சேர்ந்து முதன் முறையாக நடிக்கவுள்ளனர்.






ரஜினியுடன் இணைந்து படையப்பாவில்  நடித்த ரம்யா கிருஷ்ணன், 20 வருடங்களுக்கு பிறகு நடிக்கவிருக்கிறார். நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் 2002-ல் வெளியான பாபா படத்தில் சிறப்பு தோற்றத்தில்  நடித்திருப்பார். நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பதால் படையப்பா படத்தை இயக்குநர் ரீமேக் செய்து வைக்க போகிறார் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.


இயக்குனர் நெல்சன் பீஸ்ட் படத்தின் வெளியீட்டுக்கு பிறகு கடும் விமர்சனத்தை சந்தித்தார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கவுள்ளார்.


முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. டெல்லி சென்று வந்த ரஜினியும் , இனி ஷூட்டிங்தான் என ஸ்டைலாக பத்திரிக்கையாளரிடம்  பதிலளித்தார். இந்த மாதத்தின் 15 அல்லது 25 ஆம் தேதியில் படப்பிடிப்பு ஹைதராபத்தில் துவங்கும் என நடிகர் ரஜினி கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.