இயக்குநர் ஷிவ் நிர்வாணா இயக்கத்தில் சமந்தா விஜய் தேவரகொண்டா நடித்து இன்று திரையரங்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் குஷி.  இந்த  திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனங்களைப் பார்க்கலாம்.


குஷி


சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இரண்டாவது முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் குஷி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் குஷி படம் இன்று வெளியாகி இருக்கிறது.  ஷிவ நிர்வாணா இப்படத்தை  இயக்கியுள்ளார். சச்சின் கெதெக்கர், ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். ரொமாண்டிக் காமெடியாக எடுக்கப் பட்டிருக்கும் இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் இணையதளத்தில் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.


ஒரு நல்ல ஃபேமிலி என்டர்டெயினர்


 நகைச்சுவை கலந்த ஒரு நல்ல காதல் திரைப்படமாக குஷி அமைந்திருப்பதாக படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது










சின்ன சின்ன குறை


எளிமையான ஒரு கதையை அழகாக சொல்லியிருந்தாலும் படத்தின் நீளம் ஒரு சின்ன குறையாக ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.










 நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் குஷி திரைப்படம் ரசிகர்கள் அனைவரும் சென்று மகிழ்ச்சியாக பார்த்து வரக்கூடிய ஒரு படமாக அமைந்திருக்கிறது என்றே விமர்சனங்களை வைத்து பார்க்கும்போது தோன்றுகிறது.