லிகர் பட முன் வெளியீட்டு விழா  இன்று சென்னையில் நடைபெற்றது அந்த மேடையில் அனன்யா பாண்டிய வை தமிழில் ஐ லவ் யூ சொல்ல வைத்தார் விஜய் தேவரகொண்டா.




தர்மா தயாரிப்பில் வெளியாகவிருக்கும்  லிகர் (Liger) படத்தின் முன் வெளியீட்டு விழா (Prerelease Event) இன்று சென்னையில் நடைப்பெற்றது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர்.


இப்படத்தை பற்றிய தகவல் தெரிந்த முதல் நாளிலிருந்து, சினிமா ரசிகர்கள் லிகர் படத்தை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். “ஐ ஸ்மார்ட் சங்கர்”,  “போக்கிரி” ஆகிய மாஸ் படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத், லிகர் படத்தின் இயக்குநர் ஆவார். கடந்த 20 ஜனவரி 2020ல் படம் தொடங்கிய நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே 15 செப்டம்பர்2021 அன்று மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது இந்த  நிலையில் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


ட்ரைலர் காட்சிகளில், விஜய் தேவரகொண்டா, பேச்சு குறைபாடுள்ளவர் மற்றும் பல கேங்க்ஸ்டர் சண்டைகளில் சிக்கி வரும் ஒரு கிக்பாக்ஸராக காண்பிக்கப்படுகிறார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இவரது ஜோடியாகவும், நடிகை ரம்யா கிருஷ்ணன் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாகவும் நடித்துள்ளனர்.


லிகர் படத்தின் ஹைலைட்டே, மைக் டைசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதுதான்.மைக் டைசன் இதற்கு முன்பாக, ஹாங் ஹோவர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தின் கதைகளமானது, விஜய் தேவர்கொண்டா ஒரு டீ கடை வியாபாரியாக இருந்து, இந்தியன் பாக்ஸராக MMA பட்டத்தை எப்படி வென்று காட்டுகிறார் என்பதை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.


50 முறை குத்துச்சண்டை பட்டம் வென்ற சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன், இந்தப்படத்தில்  வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.




பான் இந்தியா படமாக தயாராகி இருக்கும் லிகர் திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.


விழாவில் விஜய் தேவரகொண்டாவிடம்  ஏன் இந்த படத்திற்கு லிகர் என்ற கேட்ட  பொழுதும் அவர் நகைச்சுவையாக நான் லிக்கர்(alcohol) அடிப்பதை இந்த படத்திற்காக நிறுத்தி விட்டேன் அதனால் தான் இதற்கு லிக்ர் என பெயர் வைத்திருக்கிறோம் என்று கூறினார்.


மற்றும் தமிழ் மக்களை பற்றிய அவர், தமிழ் மக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏனென்றால் அவர்களுக்கு சினிமாவின் மேல் உள்ள ஈர்ப்பினால் நடிகர்களை கொண்டாடும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.


மக்கள் அனன்யா பாண்டேவை தமிழில் பேச சொன்னதால் மேடையில் அனன்யா பாண்டேவிற்கு தமிழில் "ஐ லவ் யூ" வை எப்படி சொல்வது என்பதை விஜய் தேவரகொண்டா கற்றுக் கொடுத்தார்.


லிகர்கர் திரைப்படத்திற்க்கு மக்களிடையே பெறும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண