நடிகர் விஜய்தேவரகொண்டா நடிப்பில் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாக உள்ள ‘லைகர்’  படத்தில் நடிகர் விஷ் வில்லனாக நடித்துள்ளார்.




மாடலாக துவங்கி, துணை இயக்குநராக வேலை பார்த்து  Puri Connects எனும் நிறுவனத்தின் CEO வாகவும் பணியாற்றி இருக்கிறார். பல தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்துள்ள இவருக்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கிய மெஹபூபா திரைப்படம் பெரிய பெயரை பெற்று தந்தது. பூரி ஜெகன்நாத்திற்கு விஷ் ரொம்ப நெருக்கம். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஷ் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 




அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலான நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் நடித்து வெளிவர இருக்கும் படம் ‘லிகர்’. பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இப்படத்தை எழுதி இயக்கிவுள்ளார். இப்படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.குத்துசண்டை வீரராக நடிகர் விஜய்தேவரகொண்டா நடித்துள்ள இந்த படத்தில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார்.





இதன்மூலம் இந்திய சினிமாவில் அவர் நடிகராக அறிமுகமாகிறார். படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருப்பதால், விஜய்தேவரகொண்டா மற்றும் படக்குழு பல இடங்களுக்கு பயணம் செய்து படத்தை பிரோமோட் செய்து கொண்டிருக்கிறது. 


இந்த நிலையில் விஜய்தேவரகொண்டாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன. அதில் அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தை தடை செய்ய ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய்தேவரகொண்டா, “ஒரு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தாண்டி இயக்குநர், நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களாக உள்ளனர். அங்கு 200 முதல் 300 நடிகர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் அனைவரும் இங்கு பணியாளர்கள்தான். ஒரு படத்தின் மூலம் பல பேருக்கு வேலை வழங்கப்படுகிறது. அதன் மூலம் பல மக்கள் வாழ்கின்றனர். 



                                 


 

அமீர்கான் சார் லால் சிங் சத்தா படத்தை எடுத்து இருக்கிறார். அங்கு அமீர்கான் என்பது அதில் நடித்திருக்கும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒரு நடிகரின் பெயர் அவ்வளவே. ஆனால் இதில் 2000 முதல் 3000 குடும்பங்கள் சம்பந்தப்பட்டுள்ளது. ஆகையால் நீங்கள் இந்தப்படத்தை தடை செய்தால், அங்கு அமீர்கான் மட்டும் பாதிக்கப்படமாட்டார். ஆயிரக்கணக்கான  மக்களின் வேலையும், அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். இது ஏன் நடக்கிறது என்றே தெரியவில்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இது அமீர்கானை மட்டும் பாதிக்காது.” என்று பேசியிருக்கிறார்.