விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்று சர்வதேச அளவில் கிண்டலுக்குள்ளாகியுள்ளது.


நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடிப்பில் உருவான திரைப்படம் பீஸ்ட். கடந்த ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களால் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. இத்திரைப்படத்தின் க்ளைமேக்ஸில் இடம்பெற்ற சேசிங் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய விமானப்படையைச் சேர்ந்த க்ரூப் கேப்டன் சிவராமன் சஜன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “I have so many questions….” என்று தலைப்பிட்டு பீஸ்ட் திரைப்படக் காட்சியை பகிர்ந்திருந்தார். அதில், பாகிஸ்தானின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த விஜயை பாகிஸ்தான் விமானப்படை விமாங்கள் துரத்தும். அப்போது, விஜயின் விமானத்தை வீழ்த்த ஏவுகணையை தவிர்க்கும் விதமாக சாதுர்யமாக செய்யும் செயல் காட்டப்பட்டிருக்கும். ஏவுகணை வெடித்த பின்னர், தான் அணிந்திருந்த ஆக்ஸிஜன் மாஸ்க்கை எடுத்துவிட்டு இந்திய விமானப்படை விமானிக்கு  சல்யூட் வைப்பார் விஜய். இந்த காட்சிகள் இப்படத்தின் ட்ரைலர் வெளியானபோதே கிண்டலுக்குள்ளானது. ஆனால், இந்த காட்சிகள் தற்போது சர்வதேச அளவில் வைரலாகியுள்ளது.










ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த காட்சி சுமார் பத்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. காப்பிரைட்ஸ் காரணமாக இந்த காட்சி ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டாலும், அந்த ட்வீட்டை 1,669 பேர் க்வோட் செய்து விமர்சனம் செய்துள்ளனர். 3,513 ரிட்வீட்டுகளையும், 11,100 லைக்குகளையும் பெற்றுள்ளது.


இதை விமர்சித்துள்ள ராணுவ வீரரான மேஜர் அமித் பன்சால் “இது என்ன???????? என் மூளை மரத்துப் போய்விட்டது... மேற்கொண்டு யோசிக்க முடியவில்லை... எல்லா தர்க்கங்களும் வீணாகிவிட்டன.” என்று விமர்சித்துள்ளார்.






விஜய் பீஸ்ட்டில் மட்டும் இல்லை, வில்லு திரைப்படத்தின் போதே இது போன்று ஒரு சாகசத்தை செய்துள்ளார் என்று வில்லு பட காட்சியையும் பகிர்ந்துள்ளனர்.






பீஸ்ட் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் சண்டை அதன் தொழில்நுட்பத் திறனுக்காகப் பேசப்படும் என்று பதிவிட்டிருந்த விமர்சகர் அபிஷேக் ராஜாவின் ட்வீட்டை பகிர்ந்துள்ள ஒருவர் அப்போ புரியல இப்போ புரியுது என்று குறிப்பிட்டுள்ளார்.







சர்வதேச அளவில் பீஸ்ட் திரைப்படத்தின் காட்சிகள் கிண்டலுக்குள்ளானதையடுத்து, விஜய்க்கு ஆதரவாக குதித்த ரசிகர்கள் பாலிவுட்டில் வெளியான திரைப்படங்களின் சில காட்சிகளை வெளியிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்.


அஜய் தேவ்கன் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான ஷிவாய் திரைப்படத்தின் காட்சியை ஒருவர் பகிர்ந்து கிண்டல் செய்துள்ளார்.






 


சுமார் 10000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் ஒருவர், கீழே இருக்கும் ஒருவருக்கு தம்ப் காட்டுகிறார். என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.






சத்யமேவ ஜெயதே திரைப்படத்தில் தந்தை மகன்கள் சேர்ந்து ஹெலிகாப்டரை பறக்க விடாமல் செய்யும் காட்சியை ஒருவர் பகிர்ந்துள்ளார்.






பாகி 3 திரைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா சஜன். எனக்கும் அந்த படத்தில் இருந்து நிறைய கேள்விகள் இருக்கிறது என்று மற்ற ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.






ரயில் தண்டவாளத்தில் ஒரு சிறுவன் விளையாடிக்கொண்டிருக்க, வேகமாக வரும் ரயிலில் இருந்து அந்த சிறுவனை காக்க ஹீரோ  முயற்சி செய்யும் காட்சியை ஒருவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ஒரு லட்சம் வியூஸ்களையும், 1608 லைக்குகளையும் பெற்றிருக்கிறது.






தரையிறங்க முடியாத விமானத்தை சூப்பர் ஹீரோ ஒருவர் தரையிறங்க வைக்கும் காட்சியை ஒருவர் பகிர்ந்து, இதில் இவருக்கு கேள்விகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.






அதிக உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருக்கும்போது விமானி மாஸ்க்கை கழற்றினால் என்னவாகும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ள காட்சியையும் விஜய் ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர்.







தென்னிந்திய திரைப்படங்கள் பாலிவுட்டை ஆக்கிரமித்திருப்பது குறித்து கடந்த சில நாள்களுக்கு முன் கடுமையான விவாதங்கள் எழுந்தது. இதன்காரணமாக பாலிவுட், கோலிவுட் நடிகர்களிடையே விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில், பீஸ்ட்டின் இந்த குறிப்பிட்ட காட்சியை பகிர்ந்து இது தான் தென்னிந்திய திரைப்படங்களின் தரம் என்று வட இந்தியர்கள் நிறுவ முயற்சிக்கின்றனர் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.