கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் காலை முதல் சிபிஐ சோதனை நடத்தி வரும் நிலையில் முதல் தகவல் அறிக்கையின் நகல் வெளியாகியுள்ளது. சீன நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக விசா பெற ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளதாகவும்,  ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில் முறைகேடாக விசா பெறப்பட்டிருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவாகியுள்ளது. பஞ்சாப் நிறுவனத்தில் பணியாற்ற 250 சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை, டெல்லி, பஞ்சாப், மும்பை ஆகிய இடங்களில் குற்றம் நடந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்து, சென்னை, மும்பை, ஒடிசா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் கார்த்தி சிதம்பரத்தின் பெயர் இரண்டாவது நபராக இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் பாஸ்கரராமன்  என்பவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.


காங்கிரஸ் எம்பி. கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 7 இடங்களில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். தன்னுடைய வீட்டில் நடைபெற்று வரும் ரெய்டு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் ஒரு ட்விட்டர் பதிவை செய்திருந்தார். அதில் எத்தனை முறை தான் ரெய்டு நடத்துவார்கள் என்ற கிண்டலாக கேள்வியை எழுப்பியிருந்தார். 


இந்நிலையில் இதற்கு முன்பாக எப்போது எல்லாம் ப.சிதம்பரம் மற்றும் ப.சிதம்பரத்தின் மகன் ஆகியோர் இல்லத்தில் எத்தனை முறை ரெய்டு நடைபெற்றுள்ளது?


2017-ஆம் ஆண்டு ரெய்டு:


2017ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான 17 இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது. அப்போதும் சிபிஐ ஐஎன்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக சென்னை, டெல்லி, குருகிராம் உள்ளிட்ட 17 இடங்களில் சோதனை நடைபெற்றது. 









2019ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பு உடைய சுமார் 14 இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது. அப்போது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக இவர்களுடைய வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியது. 


2022ஆம் ஆண்டு ரெய்டு:


இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் சிபிஐ கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறது. இம்முறை  2010-2014ஆம் ஆண்டு ப.சிதம்பரம் அமைச்சராக இருந்த போது ஒரு பவர் நிறுவனத்திற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாக கூறப்படுகிறது. அத்துடன் 250 சீன நாட்டினருக்கு 50 லட்சம் லஞ்சம் பெற்று கொண்டு விசா தந்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ரெய்டு நடைபெற்றுள்ளது. 


ஏர்செல்-மார்க்சிஸ் வழக்கு என்பது 2006ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது ஏர்செல்-மார்க்சிஸ் ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பான முறைகேடு தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 


ஏர்செல்-மார்க்சிஸ் வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து கொண்டிருந்த போது ஐஎன்.எக்ஸ் மீடியா வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. 2016ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டு ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிபிஐ கைது செய்தது. அதன்பின்னர் அவர் நீதிமன்றத்தில் பிணை கிடைத்தப்பிறகு  விடுவிக்கப்பட்டார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண