Romeo: விஜய் ஆண்டனியின் ரோமியோ: கலக்கல் போஸ்டர், கோடை ரிலீஸ்: அப்டேட் தந்த படக்குழு!

Romeo : விஜய் ஆண்டனி - மிருணாளினி ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'ரோமியோ' திரைப்படம் வரும் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது,

Continues below advertisement

 

Continues below advertisement

வெற்றிகரமான இசையமைப்பாளராக இருந்து நடிகரான விஜய் ஆண்டனி பேக் டூ பேக் நல்ல கதைகளாக தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான 'பிச்சைக்காரன் 2' மற்றும் 'கொலை' திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு நல்ல வசூலையும் ஈட்டியது. 

 

விஜய் ஆண்டனியின் 'ரோமியோ' : 

அதன் தொடர்ச்சியாக குட் டெவில் புரொடக்ஷன் தயாரிப்பில் இயக்குநர் விநாயக் வைத்யநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'ரோமியோ'. 'எனிமி' படத்தில் நடிகர் விஷால் ஜோடியாக நடித்த மிருணாளினி ரவி இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், ஸ்ரீஜா ரவி, இளவரசு, சுதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மிகவும் மும்மரமாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது என்ற அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. 

 

லேட்டஸ்ட் அப்டேட் :

தமிழில் 'ரோமியோ' என்ற பெயரிலும் தெலுங்கில் 'லவ் குரு' என்ற பெயரிலும் வெளியாக உள்ளது. இப்படத்தின் மூலம் பரத் தனசேகர் என்ற இசையமைப்பாளர் அறிமுகமாகிறார். 'ரோமியோ' திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் மூலம் வெளியிட்டது. மேலும் ஒரு புதிய தகவலாக இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  

 

மொரட்டு ரொமான்ஸ் :

"மொரட்டு ரொமான்ஸ், மில்க் அண்ட் விஸ்கி" என்ற கேப்ஷனுடன் இந்த கோடைக்கு பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்க வருகிறது 'ரோமியோ' என குறிப்பிட்டு படத்தின் போஸ்டர் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில்  பகிர்ந்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.

 

விஜய் ஆண்டனியின் மற்றோரு முகம் :

விஜய் ஆண்டனி இதுவரையில் திரில்லர், ஆக்ஷன், கிரைம் உள்ளிட்ட ஜானரிலேயே படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால் தற்போது அவர் நடித்திருக்கும் 'ரோமியோ' படத்தின் போஸ்ட்டரை பார்க்கும் போது இது காதல், ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் மூலம் விஜய் ஆண்டனியின் வித்தியாசமான நடிப்பை பார்க்கலாம் என அவரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். கோடை விடுமுறையை குளிர்ச்சியாக கொண்டாடும் விதமாக 'ரோமியோ' படம் இருக்கும். 

 

Continues below advertisement