மயிலாடுதுறையில் இரண்டாம் ஆண்டாக இந்தாண்டு புத்தகத் திருவிழா வருகின்ற பிப்ரவரி 2 -ம் தேதி தொடங்கி பிப்ரவரி 12-ம் தேதி வரை பத்து நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2 வது புத்தகத் திருவிழா முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.
பிப்ரவரி 2 முதல் 12-ஆம் தேதி வரை
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாசிப்பை வசமாக்கி வாழ்வை வளமாக்குவது நூல்கள். இப்படிப்பட்ட நூல்களைக் கொண்டாடும் வாசகர்களின் திருவிழா தமிழக அரசின் முன்னெடுப்பில் தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாநகரில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் எதிர்வரும் 2024 பிப்ரவரி 2 முதல் 12-ஆம் தேதி வரை மயிலாடுதுறை புத்தகத்திருவிழாவாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வினை மாவட்ட நிர்வாகம் நடத்தவுள்ளது. இத்திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் இலட்சக்கணக்கான நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. நாள்தோறும் பகல் வேலைகளில் பள்ளி மாணவர்களுக்கான நிகழ்வுகளும், பல்வேறு போட்டிகளும் நடைபெறவுள்ளன. மாலை நேரங்களில் ஒவ்வொரு நாளும் பல்வேறு அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
இப்புத்தகத்திருவிழாவை சிறப்பாக மேற்கொள்ள ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை துறை சார்ந்த அலுவலர்கள் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் புத்தகத் திருவிழா தொடர்பான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக 2வது புத்தகத் திருவிழா இலச்சினையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளனர்
Imran Khan:பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!