தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இவரது இசைக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இசையமைப்பாளராக மட்டும் இருந்த விஜய் ஆண்டனி நான் படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
இதனையடுத்து அவர் நடித்த ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து அவருக்கென தனி ரசிகர்களையும் உருவாக்கி வைத்திருக்கிறார்.
சமீபத்தில் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'கோடியில் ஒருவன்' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் எழுதி, இயக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படமானது கடந்த 2014ஆம் ஆண்டு நிர்மல் குமார், விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாக தயாராகிவருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி தனது அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். அந்தப் படத்தை சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்ப்படம்’ படத்தை இயக்கிய சி.எஸ். அமுதன் இயக்கவிருக்கிறார்.
இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக முன்னணி நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இன்ஃபினிட்டிவ் ஃபிலிம் வென்ச்சர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. பட தலைப்பு மற்றும் கதாநாயகி குறித்து விரைவில் படக்குழு அறிவிக்க உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Bigg Boss 5 Tamil: கமலுக்கு பதில் இவர் ; பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரெடியான ரம்யா கிருஷ்ணன்
Nayanthara New House: ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டனில் புதிய வீடு வாங்கினார் நயன்தாரா..!