நடிகை நயன்தாரா சென்னை போயஸ் கார்டனில் புதிதாக  வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம்.


ஜெயலலிதா இருந்த வரை தமிழ்நாட்டு அரசியல் சென்னை போயஸ்கார்டனை சுற்றியே இருந்தது. அவர் இறந்த போதும் பேசுபொருளாக இருக்கிறது போயஸ் கார்டன். உச்ச அரசியல் நட்சத்திரம் மட்டும் வாழ்ந்த பகுதி மட்டுமல்ல, உச்ச சினிமா நட்சத்திரம் ரஜினிகாந்த் வாழும் பகுதியும் போயஸ் கார்டன் தான். இப்படி விவிஐபிக்கள் வாழ்ந்த & வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த பகுதிக்குள் விரைவில் அடியெடுத்து வைக்கிறார் இன்னொரு விவிஐபி.


நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். மேலும் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடிக்கும் அட்லீயின் இயக்கத்தில் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். தற்போது, ​​நயன்தாரா சென்னை போயஸ் கார்டனில் புதிய வீடு வாங்கியுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. 


நயன்தாரா தனது படங்களுக்காக அதிக சம்பளம் பெறுவதாகவும், ரஜினிகாந்த், தனுஷ் போன்ற நட்சத்திரங்கள் வசிக்கும் சென்னை போயஸ் கார்டனில் புதிய வீடு வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் போயஸ் கார்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு 4BHK வீடு வாங்கியுள்ளாராம்.


 






மேலும் அவர் விரைவில் ஒரு நல்ல நாளில் அந்த வீட்டில் குடியேற உள்ளார். நயன்தாரா தனது தற்போதைய படங்களுக்கான வேலைகளை முடித்தவுடன் தனது காதலர் விக்னேஷ் சிவனை விரைவில் திருமணம் செய்துகொள்ளும் திட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


நயன்தாரா சமீபத்தில் தனது 37ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். மேலும் சமூக வலைதளங்களில் நடிகைக்கு ரசிகர்கள் மற்றும் நட்சத்திரங்களின் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நயன்தாரா தனது பிறந்தநாளை தனது காதலனும் பட இயக்குநருமான விக்னேஷ் சிவன், சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோருடன் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பில் கொண்டாடினார். மேலும், கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் வைரலாக பரவியது.


சென்னையில் நிலத்தின் மதிப்பு மிக அதிகமாக உள்ள இடங்களில் போயஸ்கார்டன் தான் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு ஒரு சதுர அடியின் விலை 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. இதே பகுதியில் தான் நடிகர் தனுஷும் வீடு கட்டிக்கொண்டிருக்கிறார் என்பதும், வருமானவரித்துறையினரின் தடை நீக்கப்பட்டால் சசிகலாவின் போயஸ்கார்டன் வீடும் கட்டி முடிக்கப்படும் என்பதும் கூடுதல் தகவல் ஆகும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண