Vijay Antony Daughter: மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படும் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மகள் மறைவுக்கு திரைத்துறை நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ”அன்பு சகோதரர் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா இறைவனடி சேர்ந்தார் எனும் தாங்க முடியாத துயர செய்தி அறிந்து மன வேதனையுற்றேன். தங்கையின் ஆன்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார். 






நடிகர் விஷால் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், ”என்னுடைய நெருங்கிய நண்பரும், பள்ளி வகுப்பு தோழனுமான விஜய் ஆண்டனியின் மகளின் மறைவு செய்தில் மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ராஜா ஒரு நண்பனாகவும், சகோதரனாகவும் உங்களுடன் நான் எப்பொழுதும் இருப்பேன். தைரியமாக இருங்கள். வாழ்க்கை கணிக்க முடியாதது. உங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. மகளை இழந்து வாடும் இரங்கல் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல், இந்த வேதனையில் வெளியே வர கடவுள் வலிமையை தர வேண்டும். உங்கள் மகளின் மறைவு செய்தி எனது மனதை வெறுமையாக்கியுள்ளது” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். 






நடிகர் சிம்பு வெளியிட்ட இரங்கல் பதிவில், சகோதரர் விஜய் ஆண்டனிக்கு ஏற்பட்ட இழப்பை கேட்டு இதயம் நொறுங்கி விட்டது. அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். 






இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் வெளியிட்ட இரங்கல் பதிவில், விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்துக்கு ஏற்பட்ட இந்த கடினமான நிலை மனதை கடினமாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 






இவர்களை தவிர நடிகர்கள் கார்த்திக், சித்தார்த், சதீஷ், சத்தியராஜ், சிபிராஜ், பார்த்திபன், பிரபுதேவா, சிம்பு, விஜய்யின் தாய் ஷோபா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் மிஷ்கின், நடிகை ரித்திகா சிங், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று மறைந்த விஜய் ஆண்டனியின் மகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.


மேலும் படிக்க: Vijay Antony Daughter: "என் தங்கக்கட்டி, செல்லக்குட்டி..." மனதை ரணமாக்கும் விஜய் ஆண்டனி மனைவியின் போஸ்ட்..!