கோவையில் விஜய் ரசிர்கள்கள் நடத்தும் விலையில்லா விருந்தகத்தில் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் தரப்பு உதவியை செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 






திரையுலகைப் பொறுத்தவரை ரசிகர்கள் அனைவரும் தங்கள் பிடித்த நடிகரை தவிர மற்ற நடிகர்களை எதிரிகளாகத் தான் நினைக்கிறார்கள் என்ற எண்ணம் நெடுங்காலமாக உள்ளது. சினிமா களத்தை தவிர்ந்து மற்ற இடங்களில் தாங்கள் எப்போதும் ஒற்றுமையாகத் தான் இருக்கிறோம் என பல நிகழ்வுகளில் ரசிகர்கள் நினைவுப்படுத்தி வருகின்றனர்.இதில் சிலர் விதிவிலக்காக சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தரம் தாழ்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருவது வழக்கம். இதில் விஜய்-அஜித் ரசிகர்கள் மிக முக்கியமாக மோதலில் ஈடுபடுவதை காணலாம். 


ஆனால் கோவையில் விஜய்-அஜித் ரசிகர்கள் நட்பு மற்ற அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அங்கு விஜய் விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் மக்களுக்கு இலவசமாக உணவாக வழங்கி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 12 இடங்களில் நடந்து வரும் இந்த விலையில்லா விருந்தகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விருந்தகத்தில் அஜித் பிறந்தநாள், படம் ரிலீஸ், குடும்பத்தில் எதும் நிகழ்ச்சி என அனைத்திற்கும் அவரது ரசிகர்கள்  விஜய் விலையில்லா விருந்தகத்தில் அன்னதானம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 






அந்த வகையில் நேற்றைய தினம் அஜித் சினிமாவில் 30 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் விஜய் விலையில்லா  விருந்தகத்தில் அஜித் ரசிகர்கள் அன்னதானம் வழங்கியுள்ளனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அஜித் ரசிகரான பிரித்தன் என்பவர், எங்களுக்கு ஒன்று என்றாலும், அவர்களுக்கு ஒன்று என்றாலும் நாங்கள் மாறி மாறி சப்போர்ட்டாக இருப்போம். எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை. விஜய் ரசிகர்கள் பலரும் நண்பர்களாக உள்ளனர் என கூறியுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண