தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் முரளி நடிக்க இருந்த 3 படங்களில் நடித்ததால் தான் அவருக்கான வளர்ச்சியே திரைத்துறையில் ஏற்பட்டது என தகவல்கள் பரவி வருகின்றன. 


முரளிக்காக எழுதப்பட்ட பூவே உனக்காக:


எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனான விஜய் ஆரம்பத்தில் துணை நடிகராக அறிமுகமானார். பின்னர், தந்தை கதை எழுதி இயக்கிய படங்களில் ஹீரோவான விஜய்க்கு ஆரம்பத்தில் சறுக்கல்கள் தான் இருந்தன. ஆனாலும், விஜய்யின் நடிப்பு அடுத்தடுத்த படங்களில் ஹிட் கொடுத்து அவரை நம்பர் ஒன் ஹீரோவாக உயர்ந்தியது. காதல், ஆக்‌ஷன், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்து ஜானர் கதைகளிலும் ஆல்ரவுண்டராக வலம் வந்த விஜய் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாக மாறியுள்ளார். 


தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் படத்தில் மட்டுமே நடித்து வந்த விஜய், முதன் முதலாக விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். அந்த படத்தில் முதன் முதலில் முரளி நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்காக தான் கதையையும் விக்ரமன் எழுதி இருந்ததாராம். ஆனால், சில காரணங்களால் அந்த படத்தில் முரளி நடிக்க முடியாமல் போனது. பூவே உனக்காக படம் விஜய்க்கு திருப்புமுனையாகவே அமைந்தது.


காலமெல்லாம் காத்திருப்பேன், சந்திரலேகா:


அடுத்ததாக முரளி நடிக்க இருந்த காலமெல்லாம் காத்திருப்பேன் படமும், வனிதா விஜயகுமார் ஹீரோயினாக நடித்த சந்திரலேகா படமும் விஜய்க்கு வந்தது. அந்த காலக்கட்டத்தில் ஹீரோவாக கொடிக்கட்டி பறந்த முரளி இந்த படங்களில் நடிக்க முடியாமல் போனது அவருக்கு பதிலாக விஜய் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படங்களில் விஜய் நடிக்கவில்லை என்றால் அவரது திரைத்துரை பயணம் இவ்வளவு வளர்ச்சியை கண்டிருக்காது என கூறப்படுகிறது. 


விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வரும்19ம் தேதி ரிலீசாக உள்ளதை ஒட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. இந்தி நடிகர்கள், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் லியோ படத்தை பார்க்க ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளடு. விஜய் தனக்கென பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார். விஜய்யின் மேடை பேச்சுகள் அரசியலை சார்ந்து இருப்பதால், தமிழக அரசியலிலும் விஜய் பேசப்படும் நபராக வலம் வருகிறார். 


இந்த நிலையில் விஜய் ஆரம்ப காலத்தில் முரளி நடிக்க இருந்த படங்களில் நடித்ததால் தான் அவரது கெரியர் வளர்ந்தது என்ற தகவல் பகிரப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க: Chithha Box Office: சித்தா படத்திற்கு தொடரும் வரவேற்பு - பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?


Mark Antony Box Office: ரூ.100 கோடி வசூலை நெருங்கும் மார்க் ஆண்டனி!