விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது 100 கோடி ரூபாய் வசூல் சாதனையை நெருங்கி வருகிறது. 


வசூல் சாதனையில் மார்க் ஆண்டனி


இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி கடந்த செப்டம்பர் 15- ம் தேதி வெளியான படம் மார்க் ஆண்டனி. விஷால், எஸ்.ஜே. சூர்யா உடன் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


 இதுவரை உலகளவில் ரூ.90 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மார்க் ஆண்டனி ரூ.100 கோடியை வசூலித்துவிட்டதா? என ரசிகர் ஒருவர எக்ஸ் தளத்தில் கேள்வியெழுப்பினார். இதைக் கண்ட தயாரிப்பாளர் வினோத் ’இன்னும் சில நாள்களில்..’ என பதிலளித்திருக்கிறார்.


த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரது கதை சொல்லும் விதம் சற்று மாறுபட்டத்திருந்தாலும், சில படங்கள் பெரிதாக ரசிகர்களிடம் கவனம் ஈர்க்கவில்லை.


ஏற்கனவே மார்க் ஆண்டனி படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், படமும் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளதாக விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. 1980 மற்றும் 1990 களில் பிரபலமான பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்தது தொடங்கி  மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை ரீ-கிரியேட் செய்தது வரை படத்தில் இருந்த சீன்ஸ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.  மார்க் ஆண்டனி படம். இப்படம் முதல்நாள் பாக்ஸ் ஆபீஸில் ரூ.7 கோடி வரை வசூல் செய்தது.


இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.ஹாலிவுட் திரைப்படங்களிலும், சில தமிழ் படங்களிலும் பார்த்த டைம் டிராவல் கதையை சற்று வித்தியாசமாக யோசித்து மார்க் ஆண்டனி திரைப்படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


மார்க் ஆண்டனியின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஷால், “நான் ஆதிக்குடன் ஒரு படம் பண்ணுவதாக அறிவித்ததும், நிறைய பேர் அவர் கூட ஏன் படம் பண்றீங்கனுதான் கேட்டாங்க. எனக்கு கன்டென்ட் பிடிச்சிருக்கு. அந்த தம்பி மேலேயும் நம்பிக்கை இருக்கு, கரெக்டா பண்ணிடுவாருனு சென்னேன். ஆனால் என்னிடம் அப்படி கேட்டவர்களே இப்போது கால் செய்து படம் நன்றாக இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் நன்றாக இயக்கி இருக்கிறார் என்று கூறுகிறார்கள்” என்றார். 


மார்க் ஆண்டனி தனது கேரியரில் மிகப்பெரிய படம் என்றும், ஒரு மைல்கல் என்றும், 100 கோடி கிளப்பில் சேரப்போவதாகவும், இது தனது கேரியரில் 100 கோடி வசூல் செய்யும் முதல் படம் என்றும் விஷால் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரூ.100 கோடி வசூலை நெருங்கி வருகிறது படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இதற்கு ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.