லியோ விமர்சனம்


உலகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் லியோ திரைப்படம் கொண்டாடப்பட்டது. இன்னொரு பக்கம் ஒரு தரப்பினர் படத்தை விமர்சித்தனர். லியோ படத்தின் இரண்டாம் பாதி சூப்பரா சுமாரா என்பது ரசிகர்களுக்கு இடையில் முடிவடையாத விவாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எது எப்படியோ படத்தின் மீதான விமர்சனம் படத்தில் வசூலை பெரிய அளவில் பாதிக்கவில்லை.




 தளபதி 68


இந்த நிலையில் நடிகர் விஜய்  லியோ படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்து நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் நடிகர் விஜயின் 68வது  திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பதினைந்து நாட்கள் இடைவேளைக்கு பின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக, இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் படக் குழுவினர்  பாங்காக் சென்ற நிலையில், விஜய் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக இன்று பாங்காக் புறப்பட்டார்.






Laila Video: என் பிறந்தநாள் எப்போதும் ஸ்பெஷல்....தளபதி 68 அறிவிப்பு.. லைலா வெளியிட்ட மகிழ்ச்சி வீடியோ.


தளபதி 68 படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த படத்தில் சினேகா உள்ளிட்டோர் நடிக்கவிருந்தாலும், விஜய் மற்றும் லைலா இருக்கும் புகைப்படம்  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், இந்த படத்தில் நடிக்க உள்ள சினேகா ஏற்கனவே விஜயுடன் வசீகரா படத்தில் நடித்துவிட்டார். ஆனால், 90ஸ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகைகளில் ஒருவராக வலம் வந்த லைலா விஜய்யுடன் நடிப்பது இதுவே முதல் முறை என்பதால் தான் லைலா விஜயுடன் நடிப்பதை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். 


கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால், நேற்று லைலா தனது பிறந்தநாளை கொண்டாடினார். தனது பிறந்தநாளில் மூன்று மகிழ்ச்சியான விஷயம் நடைபெற்று இருப்பதாக லைலா மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார். லைலா பேசியதாவது: ”லைலா பிதாமகன் வெளியாகி 20 ஆண்டு, சர்தார் வெளியாகி ஓராண்டு, தளபதி 68 படத்தின் அறிவிப்பு, என் பிறந்தநாள் எப்போதும் ஸ்பெஷலான விஷயங்களை கொடுத்து வருகிறது. உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி”  இவ்வாறு அவர் வீடியோவில் பேசி உள்ளார். 


லைலா முன்னனி நடிகையாக இருந்த போது அந்த சமயத்தில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வந்த பிரசாந்த், விக்ரம், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துவிட்டார். ஆனால், விஜய்யுடன் நடிக்கவில்லை. விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படம் விஜய்க்கு வெற்றிப்படமாக அமைந்த நிலையில்,  விக்ரமன் மீண்டும் விஜயை வைத்து ஒரு காதல் படத்தை இயக்க முடிவு செய்து ‘உன்னை நினைத்து’ என்ற ஒரு காதல் ஸ்க்ரிப்டை தயார் செய்தார். 


இந்த படத்தில் விஜய் நடிக்க ஒப்புக் கொண்ட நிலையில் படப்பிடிப்பும் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. படத்தின் படபிடிப்பு ஆரம்பித்து ஓரிரு நாளில் படத்தில் இருந்து விஜய் விலகியதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் படத்தில்  நடிகர் சூர்யா கமிட் ஆகி நடித்தார். நந்தா திரைப்படத்திற்கு பின்னர் சூர்யாவிற்கு ஒரு மாபெரும் வெற்றிப்படமாக இது அமைந்தது. 


உன்னை நினைத்து படத்தில் லைலா விஜயுடன் சேர்ந்து நடிக்க முடியாமல் போன நிலையில், தற்போது தளபதி 68 படத்தின் மூலம் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். தளபதி 68 பூஜையின் போது லைலா-விஜய் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் லைலா என்ன ரோலில் நடிக்கின்றார் உள்ளிட்ட தகவல்கள் பின்னர் வெளியாகும்.