லியோ வெற்றி விழா


லியோ வெற்றிவிழாவில் நடிகை த்ரிஷா சிவப்பு நிற புடவையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். பெரும்பாலான சினிமா பிரபலங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அவர்களின் உடைகளை தேர்ந்த கலைஞர்கள் வடிவமைக்கிறார்கள். அப்படி சமீப காலத்தில் ஆடை வடிவமைப்புத் துறையில் குறிப்பாக சினிமாவில் அதிகம் குறிப்பிடப்படும் ஒரு பெயர் என்றால் ஏகா லகானியின் பெயர்.




 


ஏகா லகானி






மும்பை எஸ்.என்.டி டி பெண்கள் பல்கலைக்கழத்தில் தன்னுடைய பேச்சுலர் பட்டம் பெற்ற ஏகா லகானி, அமெரிக்காவில் நியூயார்க் பேஷன் நிறுவனத்தில் மேற்படிப்பை முடித்தார். படிப்பை முடித்து இந்தியா திரும்பிய ஏகா உலக புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான சப்யசாச்சி முகர்ஜியிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்தத் தருணத்தில் தான் இயக்குநர் மணிரத்னம் இயக்கைய ராவணன் படத்தில் உதவி ஆடை வடிவமைப்பாளராக பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அப்போது அவருக்கு வயது வெறும் 22. 


மணிரத்னமுடன் 12 ஆண்டுகால பயணம்




தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் முதல் முதலாக மூத்த ஆடை வடிவமைப்பாளராக நியமிக்கப் பட்டார் ஏகா லகானி. அப்போதிருந்து இறுதியாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் வரை 12 ஆண்டுகாலமான இவர்களின் பயணம் தொடர்ந்து வருகிறது. மணிரத்னம் குறித்து ஏகா லகானி இப்படி சொல்லியிருக்கிறார் ‘ மணிரத்னத்தின் படங்களில் வேலை செய்யத் தொடங்கியதில் இருந்தே நான் அவரது பள்ளியில் தான் வளர்ந்தேன். இன்று படங்கள் பற்றி எனக்கு தெரிந்த எல்லாமும் அவர் கற்றுக் கொடுத்ததுதான். ஆடைகள் முதல் ஒவ்வொரு பொருளும் திரையில் எப்படி தெரியும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்தது அவர்தான்.  இந்த 12 ஆண்டுகளில் நான் ஆடைகள், நகைகள், வண்ணங்களுடன் மட்டுமே என்னுடைய நேரத்தை செலவிட்டிருக்கிறேன். இதற்கெல்லாம் என்னுடைய வேலை என்னை அனுமதிக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.


பொன்னியின் செல்வன்


ஏகா லகானியின் திறமைக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய சவால்தான் பொன்னியின் செல்வன். வரலாற்றுத் திரைப்படமாக உருவாக இருந்தப் படத்திற்கு தன்னை பலவிதங்களில் தயார் செய்திருக்கிறார் ஏகா. மேலும் இந்தப் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு பயண்படுத்த வேண்டிய ஆடைகள் அவர்கள் அணிந்திருக்கு  நகைகளுக்கு தனி அபாரமான முயற்சிகளை செய்திருக்கிறார் ஏகா லகானி. இது குறித்து அவர் பேசும்போது


”பொன்னியின் செல்வன் திரைக்கதையை படிப்பதற்கு முன்பாகவே நான் அந்த நாவலின் இரண்டு பாகங்களை படித்து முடித்திருந்தேன் அப்போது மணி சாரிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களுக்கு எந்த மாதிரியான ஆடைகளை வடிவமைக்க வேண்டும் என்பதற்காக தஞ்சாவூருக்கு தான் ஒரு பயணம் செய்ய இருப்பதாகவும் அதற்கு என்னையும் அவருடன் வரும்படி அழைத்தார். இதற்கு முன்பாக ஒரு படத்திற்கென்று தனியாக நான் இப்படி ஒரு பயணம் சென்றதில்லை அதனால் எனக்கு இது அதிக உற்சாகமளித்தது. 


” வரலாற்று ஆசிரியர் ஜெயராமல் சுந்தரராமன் தஞ்சாவூர்  சிற்பக் கலையை விளக்கினார். ஒவ்வொரு சிலையையும் தனித்தனியாக எனக்கு விளக்கி அதற்கு பின் இருக்கும் நோக்கத்தையும் கூறினார். அவர் கூறியதுதான் நான் இந்தப் படத்தில் செய்யப் போகும் வேலைகளுக்கு எனக்கு அடித்தளமாக அமைந்தது . படத்தில் ஒரு வீரன் அணியும் கேடயமாக இருந்தாலும் சரி அது இங்கு இருக்கும் கோயில்களின் தூண்களைப் பார்த்து உருவாக்கியவைதான். அதே மாதிரி சோழர் காலத்தில் அரசர்களுக்கும் அரசிகளுக்கும் ஆடைகள் நெய்து கொடுத்தவர்களின் வம்சாவளிகளை தஞ்சாவூரில் நான் சந்தித்தேன். தங்களது முன்னோர்களைப் பற்றியக் கதைகளை அந்த மக்களிடம் சொல்லி கேட்டுத் தெரிந்துகொண்டேன் “ என்று ஏகா கூறியுள்ளார்.


120 நபர்கள் கொண்ட குழு


பொன்னியில் செல்வன் படத்தின் கதாபாத்திரங்களுக்கான ஆடைகளை வடிவமைக்க 8 முதல் 10 மாதங்கள் படப்பிடிப்பிற்கு முன்பாக உழைத்திருக்கிறார் ஏகா லகானி. அவர் மற்றும் 20 உதவியாளர்கள் மற்றும் தையல்காரர்கள், சாயமேற்றுபவர்கள் என மொத்தம் 120 பேர் படப்பிடிப்புத் தளத்தில் நின்று தொடர்ச்சியாக உழைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனி கவனம் செலுத்தி அவர்களின் ஆடை அணிகலண்களை உருவாக்கி இருக்கிறார்கள்.




உதாரணமாக ஐஷ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரத்தின் குணத்திற்கேற்ற படி அவரது ஆடைகளை கருப்பு  போன்ற அழுத்தமான நிறங்களை தேர்வு செய்திருக்கிறார்கள். மேலும் அவரது நகைகளை அடர்த்தியான ஒரு வகை பழுப்பு நிறத்துடன் உருவாக்கி இருக்கிறார்.


குந்தவை




அதே போல் குந்தவையின் கதாபாத்திரத்திற்கு சிவப்பு மற்றும் ஊதா போன்ற செழிப்பான நிறங்களை பயன்படுத்தி இருக்கிறார். 


நகைகள்


ஆடைகள் மட்டுமில்லாமல் பொன்னியின் செல்வன் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கு நகைகளும் இந்தப் படத்திற்கென்று உருவாக்கப்பட்டவை. சோழர்கள் எந்த எந்த ஊர்களுக்கு வணிகம் செய்தார்கள் அந்த ஊர்களில் இருந்து எந்த மாதிரியான நகைகளை அவர்கள் பெற்றார்கள் என்பதை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள், கிஷன்தாஸ் & கோ என்கிற பாரம்பரிய நகை செய்யும் நிறுவனம் இந்தப் படத்திற்கான நகைகளை வடிவமைத்துள்ளார். மாணிக்க கற்கள், பட்டைத்தீட்டப் படாத வைரங்கள் இந்தப் படத்தில் அதிகம் பயண்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பிற இடங்களில் இருந்து வந்த தூதர்கள் பெரும்பாலும் மரகத கற்களை பரிசாக கொடுக்கும் வழக்கம் இருந்ததால் சில இடங்களில் மரகதக் கற்களைப் பயண்படுத்தி இருக்கிறார்கள். 


பிரபலங்களை அலங்கரிக்கும் பிரபலம்


தற்போது கரண் ஜோகர், ரன்வீர் சிங், என பல இந்திய பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகிறார் ஏகா லகானி. மணிரத்னம் படத்தைத் தவிர்த்து லியோ படத்தினைத் தொடர்ந்து தற்போது ஷாருக்கான் நடித்திருக்கும் டங்கி படத்திலும் பணிபுரிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.