டோலிவுட் சினிமா ரசிகர்களின் மிகவும் ஃபேவரைட் ஹீரோ விஜய்  தேவரகொண்டா. மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த முன்னணி நடிகர் தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபுவுடன் இணைந்து 'குஷி' எனும் ரொமான்டிக்கான நகைச்சுவை காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த ஜாலியான காதல் கதையை இயக்கி வருகிறார் ஷிவா நிர்வானா. 


 



ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது :


தெலுங்கில் உருவாகி வரும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் வெளியான தகவலின் படி இப்படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 






 


விஜய் தேவரகொண்டா சொன்ன செய்தி :


சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் விஜய தேவரகொண்டா 'குஷி' திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். மேலும் அதில் விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிப்பில் உருவாகி வரும் 'குஷி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோனதை உறுதிப்படுத்தியுள்ளார். இப்படம் பிப்ரவரி 2023ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். அதேபோல் அவர் இப்படத்தின் 60 % படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். 


 






அந்த சுகமான அனுபவம் : 


நடிகை சமந்தா குறித்தும் பேசுகையில் " நான் கல்லூரி பட்டப்படிப்பு படித்து கொண்டு இருக்கும் போது சமந்தாவின் படங்களை பார்ப்பதற்காகவே தியேட்டருக்கு செல்வேன். எனக்கு மிகவும் பிடித்தமான ஹீரோயின் சமந்தா. ஆனால் இன்று நான் அவருடன் திரையை பகிர்ந்து கொள்வதை நினைத்து மிகவும் பூரிக்கிறேன். அவருடன் இணைந்து இந்த திரைப்படத்தில் நடிப்பது ஒரு அழகான அனுபவம். அந்த நாட்கள் ஒரு மேஜிக் போல இருந்தது. எனவே குஷி திரைப்படத்தில் திரையில் காண்பதற்கு ரசிகர்களை போலவே நானும் மிகவும் ஆவலாக இருக்கிறேன்" என்றார் விஜய் தேவரகொண்டா. சமந்தாவின் உடல் நிலையையும் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோனதற்கு ஒரு காரணமாக இருக்குமோ என கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.


  
குஷி படத்தில் ஜெயராம், சச்சின் கெடேகர், முரளி ஷர்மா, வெண்ணேலா கிஷோர், லக்ஷ்மி, ரோகினி, அலி, ராகுல் ராமகிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். முதல் முறையாக சமந்தா - விஜய் தேவரகொண்டா இந்த திரைப்படம் மூலம் ஜோடி சேர்ந்து நடித்துள்ளதை திரையில் காண மிகவும் ஆர்வமுடன்  ரசிகர்கள்காத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.