சீன ஏவிய ராக்கெட்டில் இருந்து ஒரு பெரிய பகுதி வெள்ளி அல்லது சனி அன்று பூமியில் மீண்டும் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அது சரியாக எங்கு தரையிறங்கும் என்பது பற்றிய நிச்சயமற்ற நிலை உள்ளது. இந்தப் பகுதி சீனாவின் டியாங்காங் விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்பட்ட லாங் மார்ச் 5பி ராக்கெட்டின் முக்கிய பூஸ்டர் ராக்கெட் பாடி ஆகும். அமெரிக்க இலாப நோக்கற்ற நிறுவனமான ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் கூறுவதுபடி, இந்த பூஸ்டர் 22. 5 மெட்ரிக் டன் எடை கொண்டது மேலும் 10 மாடி கட்டிடத்தின் அளவை உடையது.
மேலும் ராக்கெட்டின் ஒரு பகுதி பூமிக்குள் கட்டுப்பாடற்ற நிலையில் நுழையும் என்று எதிர்பார்ப்பதாக அந்த கார்ப்பரேஷன் கூறியுள்ளது.
"இந்த ராக்கெட் பகுதி இறுதியில் எங்கு தரையிறங்கும் என்ற நிச்சயமற்ற தன்மை மனித பாதுகாப்பு மற்றும் சொத்து சேதத்திற்கு ஆபத்தை அளிக்கிறது. மேலும் இந்த ஆபத்து பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரம்புகளுக்கு மேல் இருக்கும்" என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்த கார்ப்பரேஷன் ராக்கெட் பகுதியை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் தரவு கிடைக்கும்போது அதன் தரையிறக்கம் பற்றிய கணிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும்.
அதன் சமீபத்திய கணிப்பின்படி, ராக்கெட் பூஸ்டர் வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும்.
ஸ்பேஸ் டாட் காம் தகவலின்படி, கிட்டத்தட்ட முழு மத்திய அமெரிக்கா, ஆப்பிரிக்காவின் பெரும் பகுதி மற்றும் வட அமெரிக்காவின் சில பகுதிகள் இந்த ராக்கெட் பகுதியின் பாதையில் இருக்கலாம்.
நீரில் பாதுகாப்பாகத் தரையிரங்கும் திறன் இந்த ராக்கெட்டுக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.
ராக்கெட் உடலின் பெரும்பகுதி வளிமண்டலத்திலேயே எரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் வலுவான துண்டுகள் தப்பிப் பிழைத்து அவை பூமியின் மேற்பரப்பில் வந்து விழும் இது பூமியின் உள்கட்டமைப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷனின் கூற்றுப்படி, பொதுவாக ஒரு பெரிய பொருளின் நிறையில் 20-40 சதவீதம் தரையை அடைகிறது, இருப்பினும் சரியான எண் அதன் வடிவமைப்பைப் பொறுத்தது என்கின்றனர்.இந்நிலையில் இந்த ராக்கெட் உடலில் 5 முதல் 9 மெட்ரிக் டன் வரை பூமியை வந்து அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.