Vignesh Sivan: எல்.ஐ.சி. படத்துக்கு எதிராக இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் படத்தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகியோருக்கு எல்.ஐ.சி நிறுவனம் நோட்டீஸ் விட்டுள்ளது. 
 

கடந்த டிசம்பர் 15ம் தேதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. லவ் டுடே படத்தில் நடித்த பிரதீப் நடிக்க இருக்கும் புதிய படத்தின் பெயர் எல்.ஐ.சி (Love Insurance Corporation) என பெயரிடப்பட்டது. படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி, யோகிபாபு, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிப்பதாகவும், அனிருத் இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. 

 

முன்னதாக படம் குறித்த அறிவிப்புடன் படப்பிடிப்புக்கான பூஜை தொடங்கப்பட்டதை விக்னேஷ் சிவன் பகிர்ந்திருந்தார். படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. 





 

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.சி. படத்தின் பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்க்கு லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பை படத்துக்கு பயன்படுத்துவதை நிறுத்தக்கோரி எல்.ஐ.சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது.நோட்டீஸ் பெற்ற 7 நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்றாவிட்டால் உரிமையியல், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் தொடங்கும்போதே படத்துக்கு புதிய சிக்கல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

முன்னதாக படப்பூஜையின் போது எல்.ஐ.சி. குறித்து படக்குழு பேசியபோது, “இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலை சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக இருக்கும்” என கூறப்பட்டது. அதனால், இயக்குநர் விக்னேஷ் சிவனின் வித்தியாசமான திரைக்கதையில்,  இப்படம் அனைவரையும் கவரும் கமர்ஷியல் படமாக  இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

மேலும் படிக்க: