ஒலிம்பியாட்டில் கமலுடைய குரலில் வந்த நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் டப்பிங் செய்வதை விடியோ காலில் இருந்து பார்த்த விக்னேஷ் சிவன் அப்போது எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிரமில் பகிர்ந்துள்ளார்.


ஒலிம்பியாட் 2022


மாமல்லபுரத்தில் நடந்துமுடிந்துள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 186 நாடுகளில் இருந்து வந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான செஸ் வீரர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப்பதக்கத்தை வென்றது. அர்மேனியா வெள்ளிப்பதக்கத்தையும், இந்திய பி அணி வெண்லகப் பதக்கத்தையும் கைப்பற்றியது. இதையடுத்து, நேற்று இரவு நடைபெற்ற பிரம்மாண்ட நிறைவு விழாவில் அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. தொடக்க விழா போன்றே, நிறைவு விழா நிகழ்ச்சிகளும் இயக்குநர் விக்னேஷ் சிவனால் இயக்கப்பட்டது.



கமல் குரல்


தொடக்க விழாவில் தமிழின் பெருமைகளை குறித்து செய்யப்பட்ட சிறப்பு பகுதி, உலகநாயகன் கமல்ஹாசனின் குரலில் செய்யப்பட்டது. அதே போல நிறைவு விழாவிலும் கமல் குரலால் அதிர்ந்தது அரங்கம். தமிழ் மண் என்ற பெயரில் அரங்கேற்றப்பட்ட அந்த கலை நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்: விரதமிருந்து மொகரம் பண்டிகையை கொண்டாடிய இந்துக்கள்.....300 ஆண்டுகளாக தஞ்சையில் நடக்கும் நிகழ்வு


டப்பிங் செய்யும் வீடியோ


இந்த நிகழ்விற்காக கமல்ஹாசன் டப்பிங் செய்வதை வீடியோ காலில் பார்ப்பது போன்ற வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் விக்னேஷ் சிவனுடன் அவரது உதவியாளர்கள் உடனிருந்தனர். அவர்களும், கமல் டப்பிங் செய்வதை விடியோ காலில் பார்த்துக்கொண்டு இருந்தனர்.






இன்ஸ்டாகிராம் பதிவு


இது குறித்து எழுதி இருந்த விக்னேஷ் சிவன், "உலக நாயகன் கமல்ஹாசனுடன் தமிழ் மண் பாகம் 2-ற்காக மீண்டும் ஒருமுறை. இந்த முறை நாங்கள் தமிழகத்தில் இருந்து விடுதலைக்காக மிகவும் பயனுள்ள வகையில், போராடிய சுதந்திர போராட்ட வீரர்கள் கதைகளை பேசி உள்ளோம். இது நம் நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவுக்கு சமர்ப்பணம். கமல் சார் அப்போது சிக்காகோவில் இருந்தார், அங்கிருந்தும் எங்களுக்காக நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி. சவுண்ட் இன்ஜினியர் குனால் ராஜனுக்கு மிகவும் கடமை பட்டிருக்கிறேன். எவ்வளவு பிசியாக இருந்தாலும் எனக்காக நேரம் ஒதுக்கி வேலை செய்து தரும் ஒருவர் இருக்கும்போது மிகவும் சக்தியுள்ளவனாக உணர்கிறேன். மேலும் அலுவல் ரீதியாக உதவி செய்த இறையன்பு சாருக்கு நன்றி. அவரோடு, அபூர்வ ஐஏஎஸ், ஜெயசீலன் ஐஏஎஸ், கார்த்திகேயன் ஐஏஎஸ் ஆகியோருக்கும் நன்றி. எனது எழுத்தாளர்கள் இலாகாவின் முகுந்த், ராகேஷ், வர்தினி, பார்வதி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். என்றும் மறக்கமுடியாத ஞாபங்களை வழங்கிய 14வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு மரியாதையுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்", என்று எழுதி இருந்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.