கடந்த ஒரு ஆண்டில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் புகழ் இந்திய அளவில் பரவிவருகிறது.  இந்திய நடிகராக வளர்ந்து வரும் இளம் நடிகருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம், அதேபோல் இவரை பற்றி பல வதந்திகளும் பரவி வருகிறது.


இவரின் பர்சனல் விஷயங்களில் ரசிகர்கள் பயங்கர ஆவலாக உள்ளனர். இவர் யாருடன் டேட்டிங் செய்கிறார், யாரை காதலிக்கிறார் என பல கேள்விகளும் அதற்கான வதந்திகளும் இணையத்தில் அலை அலையாய் சுழன்று வருகின்றன. இவருடன் இணைந்து நடித்த சக நடிகை ராஷ்மிகா மந்தனாவை இவர் டேட்டிங் செய்து வருகிறார் என பல தகவல்கள் வெளியாகின.






விஜய் தேவரகொண்ட தற்போது  ஹிந்தி சினிமாவில் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இதனையடுத்து பிரபல பாலிவுட் நடிகைகள் சாரா அலி கான், ஜான்வி கபூர் மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் இவரை பிடிக்கும் என ஓபனாக பேசினர். விஜய் தேவரகொண்டா என்றாலே எல்லோருக்கும் நியாபகம் வருவது அர்ஜூன் ரெட்டி படம்தான். காதலியை  வெறித்தனமாக நேசிப்பதும், காதலிக்கு ஏதாவது பிரச்சணையென்றால் பக்கதில் இருப்பவரை அடித்து துவம்சம் செய்வதும் என கதைக்கு ஏற்ற  காதலை வெளிப்படுத்திருப்பார் விஜய் தேவரகொண்டா.


பிரபலமான நட்சத்திரமாக இருப்பதனால் சில மக்கள் உங்களை நேசிப்பார்கள், ​​உங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்புவார்கள், அவர்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என சில சமயம் யோசிப்பார்கள். எங்களை பற்றிய செய்திகளை வாசிப்பார்கள். இது எல்லாம் எனக்கு ஒகேதான் என்று நடிகர் தேவரகொண்டா லைகர் பட சிறப்பு நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.






விஜய் தேவரகொண்டா தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. டியர் காம்ரேட் மற்றும் கீதா கோவிந்தம் ஆகிய படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றிய ராஷ்மிகாவுடனான வதந்திகள் குறித்து அரிதாகவே கருத்துத் தெரிவிக்கிறார். இருவரையும் ஒரே ஜிம்மில் இருந்து வெளிவருதையும், மும்பையில் சாப்பிடுவதற்காக ஹோட்டல்களுக்கு ஒன்றாக செல்வதையும் பலரும் பார்த்துள்ளனர். ஒரு வேல இருக்குமோ ? என்றும் அப்போ இது லவ் தான ஜெஸி என ரசிகர்கள் கமண்ட் செய்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண