தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வரும் நயன்தாராவும் , நடிகர் விக்னேஷ் சிவனும் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிகள் வாடகை தாய் மூலமாக தற்போது இரட்டை ஆண் குழந்தையை வரவேற்றுள்ளனர். விக்னேஷ் சிவன் தமிழில் நானும் ரௌடிதான் , காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இது தவிர அவ்வபோது சில படங்களுக்கு பாடல்களையும் எழுதி வருகிறார். இவர் எழுதிய அனைத்து பாடல்களுமே ஹிட். இதே போல விக்கியும் நயனும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர்.
விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். நயன்தாராவிற்கு தனியாக சமூக வலைத்தள கணக்குகள் இல்லை என்றாலும் கூட , அவரும் விக்னேஷ் சிவனின் அக்கவுண்டை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர்களின் இரட்டை குழந்தை சட்ட விதிமுறைகளை தாண்டி பெறப்பட்டதாக சிலர் விவாதித்து வந்தனர். ஆனால் அதையெல்லாம் தம்பதிகள் முறைப்படித்தான் செய்திருப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமகா சில மோட்டிவேஷனல் கோட்ஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். “ கடினமான நேரங்களை சமாளிக்க அதிக தைரியம் தேவைப்படும். அதற்காக பின்வாங்க கூடாது . விரைவில் உங்களை தேடி நல்ல விஷயங்கள் வரும் “ என குறிப்பிட்டிருந்தார். இதே போல மற்றொரு பதிவில் “ உங்கள் மன நலத்திற்கும் , உணர்வுகளுக்கும் யார் சிறந்தவர்களாக இருப்பார்களோ அவர்களை தேர்வு செய்யுங்கள் “ என குறிப்பிட்டுள்ளார்.