துணிவு பட வெற்றிக்குப் பிறகு ஏகே 62 படத்தை வரும் பிப்ரவரி மாதம் முதல் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், முன்னதாக விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தை இயக்கவில்லை எனத் தகவல் வெளியானது.


வலிமை பட தோல்விக்குப் பிறகு அஜித்-போனி கபூர்-ஹெச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியான ‘துணிவு’ படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து கலக்கல் ஹிட் அடித்துள்ளது.


விக்னேஷ்சிவன் நீக்கம்:


இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான AK 62வை லைகா ப்ரொடக்‌ஷன் தயாரிப்பதாகவும், சந்தானம், அரவிந்த்சாமி என முக்கிய நடிகர்கள் படத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானதுடன், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் தளம் தாங்கள் வாங்கியிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.


இந்நிலையில், சென்ற வாரம் திடீரென இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.


ஏகே 62 கவர் நீக்கம்:


மேலும் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி 8 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், அண்மையில் அஜித்தை சந்தித்து விக்னேஷ் சிவன் கதையை விளக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். ஆனால், ”அந்த கதை தனக்கு பிடிக்கவில்லை, கதையை சரியாக தயார் செய்யுங்கள்” என அஜித் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 


அஜித் கதை பிடிக்கவில்லை என கூறிய பிறகும், அதை பொருட்படுத்தாமல் நேரடியாக லண்டனுக்கே சென்று, லைகா நிறுவன உயர்மட்ட அதிகாரிகளிடம் விக்னேஷ் சிவன் கதையை கூறியதாகவும், அந்த கதை பிடிக்காமல் லைகா நிறுவனமும் விக்னேஷ் சிவனிடம் கடுமை காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. 


ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், முன்னதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் ட்விட்டர் பயோவில் இருந்து ஏகே 62 வையும், அஜித்தின் கவர் புகைப்படத்தையும் நீக்கியுள்ளார்.


தற்போது தன் பயோவில் தன் முந்தைய படங்கள் லிஸ்டில் போடா போடி தொடங்கி காத்து வாக்குல ரெண்டு காதல் வரையிலான படங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.


 






ஏகே 62வை தன் பயோவில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கிய நிலையில், அவரது ட்விட்டர் பயோவின் ஸ்க்ரீன்ஷாட்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.


 






மேலும், அஜித் புகைப்படத்துக்கு பதிலாக ‘நெவர் கிவ் அப்’ எனும் கவர் ஃபோட்டோவையும் விக்னேஷ் சிவன் வைத்துள்ள நிலையில், அவருக்காக ஏராளமான  கோலிவுட் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தும் ஆறுதல் கூறியும் வருகின்றனர்.