கள்ளக்குறிச்சி: வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் இன்று (4.02.2023) சனிக்கிழமை மற்றும் நாளை(05.02.2023) ஆகிய நாட்களில் நடைப்பெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார்,  அறிவிக்கப்பட்டுள்ளது.


சிறப்பு முகாம்:


கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 91% வாக்காளர்களின் ஆதார் எண்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9% வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணினை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படாமல் உள்ளனர், இவர்களுக்காக இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்காத நபர்களது ஆதார் விபரத்தினை வீடு வீடாகச் சென்று பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.


இம்முகாமில் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இதுவரை இணைக்காத வாக்காளர்கள் சம்மந்தப்பட்ட அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஆதார் விபரத்தினை அளித்து வாக்காளர் அட்டையுடன் இணைத்து இவ்வாய்ப்பினை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார், இஆப,அவர்கள் தெரிவித்துள்ளார்.


விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் மோகன், தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் முதன்மை அரசு செயலாளர் அவர்களால் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் (அல்லது) ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதை கண்டறிவதற்கும், தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண் பெற்று வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவுகள் மேற்கொள்ளவும்


உத்திரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 01.08.2022 முதல் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைத்திடும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று (சனிக்கிழமை) காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேற்படி சிறப்பு முகாமில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLOS) படிவம் -6B பெற்று ஆதார் எண் அல்லது ஆதார் எண் இல்லையெனில் படிவத்தில் குறிப்பிட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை இணைத்து வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணினை வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம். இவ்வாய்ப்பினை வாக்காளர்கள் தவறாது பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.