இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 


தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ்சிவன் திருமணம் கடந்த 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர்.  


 






முதலில் இந்த திருமணம் திருப்பதியில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் பயண தூரம், விஐபி பாதுகாப்பு போன்ற காரணங்களால் தேவஸ்தானம் அனுமதி மறுப்பு உள்ளிட்ட காரணங்களால் பின் மாமல்லபுரத்துக்கு மாற்றப்பட்டது. திருமணம் முடிந்த கையோடு இந்த ஜோடி திருப்பதி சென்று நேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இருவரும் ஹனிமூனுக்காக தாய்லாந்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.


 






அந்த வகையில் தற்போதும் அவர் தாங்கள் தாய்லாந்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்தப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.