முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வரும் நிலையில், அவரது தரப்பு வழக்கறிஞர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 


இது குறித்து வழக்கறிஞர் பாலமுருகன் கூறும் போது, “ முன்னாள் அமைச்சரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சி.வி. சண்முகத்திற்கு வாட்ஸ் ஆப் மூலமாகவும், போன் வழியாகவும் நூற்றுக்கணக்கான கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்” என்றார். 


 






முன்னதாக, அதிமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் 23 தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிக்கிறார்கள் என்று ஆவேசமாக பேசினார். தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிவி சண்முகம், “அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 5-ல் ஒரு பங்கு பேர் ஆதரவு இருந்தால், 30 நாட்களுக்குள் பொதுக்குழுவை கூட்டலாம் ” எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “ அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு, பொதுக்குழுவில் அங்கீரகாரம் பெறாத காரணத்தால், 2 பதவிகளும் காலவதியாகின. 


அதிமுகவில் பன்னீர் செல்வம் பொருளாளர் பதவியிலும் எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பதவியிலும் நீடிப்பார்கள். ஏற்கனவே நியமிக்கப்பட்ட பிற நிர்வாகிகள் தொடர்ந்து செயல்படுவார்கள்.” என்றார்.     


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண