தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள் என்பது அறிந்த ஒரு தகவல். கணவன் மனைவி இருவருமே தங்களது திரை வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள்.
விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் போஸ்ட் :
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன் அவ்வப்போது மனைவி குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து ரசிகர்களின் லைக்ஸ்களை குவிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் வெளியிட்ட போஸ்ட் சற்று வித்தியாசமானது என்பதை காட்டிலும் பக்திமயமானது என்றே சொல்ல வேண்டும். விக்கியின் இந்த லேட்டஸ்ட் போஸ்ட் தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது.
சபரிமலையில் விக்னேஷ் சிவன் :
இயக்குநர் விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு மாலை அணிந்து பயணம் மேற்கொண்டுள்ளார். அவரின் பயணத்தின் போது எரிமலைக்கு செல்லும் வழியில் நின்றபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து "ஸ்வாமியே சரணம் ஐயப்பா. உன்னை காண ஆவலுடன் வருகிறேன்..." என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை சில மணி நேரத்திற்கு முன்னர் தான் அவர் போஸ்ட் செய்துள்ளார் என்றாலும் அதற்குள் இந்த பதிவிற்கு லைக்ஸ்களும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல பிரபலங்களும் கமெண்ட் செய்து வருகையில் பிக் பாஸ் பிரபலம் நடிகர் கவின் 'சாமியே சரணம்' என கமெண்ட் ரிப்ளை செய்துள்ளார்.
விக்னேஷ் சிவன் விமானம் மூலம் சபரிமலைக்கு சென்று ஸ்வாமியை தரிசனம் செய்துள்ளார். பதினெட்டு படிகளில் விக்னேஷ் சிவன் ஏறும் போது கிளிக் செய்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வருகின்றன.
AK62 அப்டேட் :
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாக இருக்கும் AK62 திரைப்படம் ஜனவரி 17ம் தேதி முதல் முதல் தொடங்கப்பட உள்ளதாகவும், ஒட்டு மொத்த படப்பிடிப்பும் மே மாதத்திற்குள் முடிவடைந்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.