பிரபல தொகுப்பாளினி டிடியுடன் மனைவி நயன்தாரா இருக்கும் புகைப்படத்தை காதலுடன் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
கோலிவுட்டின் காதல் பறவைகளாக வலம் வரும் விக்னேஷ் சிவன் - நயன் தாரா தம்பதி இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து இருவரும் வாடகைத் தாய் முறை மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகினர்.
இந்நிலையில், திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நயன்தாரா படுபிசியாக நடித்து வருகிறார். மறுபுறம் திருமணத்துக்குப் பின் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது முதல் படங்கள் தயாரிப்பது வரை விக்னேஷ் சிவனும் பிசியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஹனிமூன் ஃபோட்டோஸ் தொடங்கி முன்னதாக வருகை தந்த கனெக்ட் ப்ரீமியர் விழா ஃபோட்டோஸ் வரை நெட்டிசன்களின் டார்லிங் ஜோடியாக நயன் - விக்னேஷ் சிவன் மாறி இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றனர்.
அந்த வகையில் டிடியுடன் நயன்தாரா இருக்கும் த்ரோபேக் புகைப்படம் ஒன்றை காதல் பொங்கும் எமோஜிக்களுடன் விக்னேஷ் சிவன் பகிர்ந்த பதிவு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நயன்தாராவை இப்படி விழுந்து விழுந்து ரசிக்கும் விக்னேஷ் சிவனின் செயல் நெட்டிசன்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளதோடு, யாராவது இவரை கண்ட்ரோல் செய்யுங்களேன் என்று கேலியாகவும் ரசனையாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
2015ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் ஹாரரான ’மாயா’ படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் உடன் நயன்தாரா மீண்டும் கைக்கோர்த்துள்ள படம் ’கனெக்ட்’. நடிகை நயன்தாரா ஹீரோயினை மையமாக வைத்து நடித்த முதல் படமாக மாயா அமைந்தது.
விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர்கள் வினய், சத்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இந்தி சினிமாவின் அனுபவ நடிகர் அனுபம் கெர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.
இத்திரைப்படத்துக்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியும் ரிச்சர்ட் கெவின் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர். கொரோனா லாக் டவுன் சமயத்தில் நிகழும் சம்பவங்களைச் சுற்றி ஹாரர் திரைப்படமாக ’கனெக்ட்’ உருவாக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (டிச.22) இப்படம் உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் 'கனெக்ட்' வெளியாக உள்ளது.