விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டம் காதலி நயன்தாராவுடன் கலந்து கொண்ட விக்னேஷ் சிவனிடம் நயனின் நம்பரை தனது போனில் எப்படி சேவ் செய்திருக்கிறேன் என்பது குறித்து பேசியிருக்கிறார்.
இது குறித்து மேடையில் நின்ற விக்னேஷ் சிவனிடம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி, நயனின் நம்பரை உங்கள் போனில் என்னவாக சேவ் பண்ணியிருக்கிறீர்கள் என்று கேட்ட போது, “முதலில் இவரை பார்த்து கதை சொல்ல போகும் போது இவர் எனக்கு மேம்தான். அதனால் அவரின் பெயரை நான் நயன் என்றுதான் சேவ் பண்ணியிருக்கிறேன்" என்றார். அந்த பெயர் இப்போது வரை அப்படியேத்தான் இருக்கிறது. நான் என்னுடைய போனையும் மாற்றவில்லை என்று கூறினார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாராவிற்கு தனியார் ஆன்லைன் சேனல் ஒன்று அண்மையில் Empress of Indian Cinema மற்றும் சிறந்த நடிகைக்கான விருது என இரு விருதுகளை வழங்கியது. இந்த விழாவில் காதலர் விக்னேஷ் சிவனுடன் கலந்து கொண்ட நயன்தாரா, அந்த விருதுகளை வாங்கிக்கொண்டார்.
பல வருடங்களாக காதலித்து வரும் நயனும் விக்னேஷ் சிவனும் ஜூன் 9 அன்று, தங்கள் வாழ்வின் அடுத்த கட்டமாக திருமண உறவில் இணைகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ள இந்த நிகழ்ச்சியை முதலில் பெரியளவில் வெளிநாட்டில் நடத்துவதற்குத் திட்டமிட்ட இருவரும் தங்கள் திட்டத்தை மாற்றியுள்ளனர்.