சமீப காலங்களாக விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பெரும்பாலும் நாய் பூனைகளின் க்யூட் வீடியோக்களை கண்டு ரசிப்போம். அவ்வபோது வனவிலங்குகளின் கோரங்களும் வீடியோவாக வரும். ஆனால் இம்முறை ஒரு பாசப்போராட்டம் வீடியோவாக வந்துள்ளது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கு ஏற்றவாறு ஒரு சிங்கத்திடம் இருந்து எப்படி தங்களது கன்றை காப்பாற்றுகிறது காட்டெருமை கூட்டம் என்பதை விடியோவில் காணமுடிகிறது.
சிங்கம் vs காட்டெருமைகள்
காட்டு எருமைகள் சிங்கத்தின் விருப்பமான உணவாகும். அத்தகைய பெரிய உருவத்தை, சிங்கம் வேட்டையாடி சாப்பிடும்போது, அதிகப்படியான உணவு கிடைப்பதால், 5 நாள்களுக்கு சிங்கம் வேட்டையாட செல்ல வேண்டிய நிலை இருக்காது. அதையே சாப்பிட்டு பசியை போக்கிக் கொள்ளலாம். அதே சமயம், காட்டு எருமையை வேட்டையாடுவதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பல வீடியோக்களில் சிங்கத்தை, காட்டு எருமைகள் கொம்பை உபயோகித்து தூக்கி வீசுவதையும் பார்த்திருப்போம். ஆனால் இந்த வீடியோவில் சிக்கியது எருமையின் கன்றாகும்.
விடியோவில்
கன்றை கடித்து இழுத்து செல்லும் சிங்கத்திடம் போராடி காப்பாற்றுகின்றன எருமைக் கூட்டம். காட்டெருமைகள் ஒன்றாக நின்று மேய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், அந்த வழியே வரும் சிங்கம் காட்டெருமைக் கூட்டத்தில் வேகமாக புகுந்து அங்கிருந்த ஒரு கன்றை கடித்து இழுத்து செல்கிறது. உடனடியாக பரபரப்பான காட்டெருமைக் கூட்டம், சட்டென சுதாரித்து அதன் பின்னாலேயே சென்று காப்பாற்ற முயற்சிக்கின்றன. தலையை கடித்து இழுத்துக் கொண்டே செல்லும் சிங்கத்திடம் இருந்து காப்பாற்ற முயற்சிக்கும் எருமைகள் பின்னாலே செல்கின்றன. ஒரு எருமை தனது கொம்புகளால் நெம்பி இரண்டுக்கும் இடையேயான பிணைப்பை துண்டிக்கிறது.
வைரல்
பிணைப்பு துண்டிக்கப்பட்ட உடன், எருமைக் கன்று கூட்டத்தினுள் ஓடிவிடுகிறது. பின்னர் ஏமார்ந்த சிங்கம் எருமைக் கூட்டத்திற்கு பயந்து ஓடுகிறது. பியூட்டி வைல்டுலைஃப் என்ற ஐடியில் இருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த விடியோவை இதுவரை 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பலரும் எருமைக்கூட்டத்தின் உத்தேவகத்தையும் ஒற்றுமையையும் பாராட்டி வருகின்றனர்.