சர்வதேச இந்திய திரைப்பட விழா


இந்திய மற்றும் உலக மொழி திரைப்படங்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய நிகழ்வு சர்வதேச இந்திய திரைப்பட விழா. ஆண்டுதோறும் கோவாவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி மத்திய அரசின் நிதியுதவி பெற்று நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழா இந்த ஆண்டு 54 ஆவது  ஆண்டை எட்டியுள்ளது. இன்று நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கியிருக்கும் இந்த விழா நவம்பர் 28 ஆம் தேதிவரை தொடர்ந்து நடைபெறுகிறது . உலகம் முழுவதிலும் இருந்தும் தயாரிக்கப்படும் பல மொழித் திரைப்படங்கள் இந்த விழாவில் எட்டு நாட்களில்  திரையிரப்பட இருக்கின்றன. மேலும் உலகம் முழுவதும் இருந்தும் திரைப்பட ரசிகர்கள் , இயக்குநர்கள், மற்றும் கலையில் ஆர்வம் கொண்ட மக்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்


இந்தியத் திரைப்படங்கள்


 இந்த விழாவில் பிறமொழித் திரைப்படங்கள் போல் இந்திய திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தியன் பனோரமா என்கிற வகைமையின் கீழ் பல்வேறு இந்தியப் படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுகின்றன. இந்தப் பிரிவில் படங்கள் திரையிடப் படுவதற்காக வின்னப்பங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் கீழ் இயங்கும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் தேர்வு செய்யும். இதன்படி இந்த ஆண்டு காதல் என்பது பொது உடமை ,  நீல நிற சூரியன் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகமும் திரையிடப்பட இருக்கிறது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகமும் இந்த விழாவில் திரையிடப்பட இருப்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி திரைப்படமும் இந்த பிரிவில் திரையிடப்பட இருக்கிறது


சிறப்பு விருந்தினர்கள்


மேலும் தமிழ், இந்தி , தெலுங்கு ஆகிய மொழிகளில்  நடித்து பரவலாக அங்கீகாரம் பெற்றிருக்கும்  நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு  நடிப்பைக் குறித்து கலந்துரையாட இருக்கிறார்.


சிறந்த வாழ்நாள் திரைப்பட விருது


இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் தயாரிப்பாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளரான மைக்கேல் டக்ளஸ்- க்கு இந்த விழாவில் உயரிய விருதான சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள் திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளபடி “புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸ், 54வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில், புகழ்பெற்ற சத்யஜித் ரே திரைப்பட வாழ்நாள் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டின் மீது அவருக்குள்ள ஆழ்ந்த அன்பு  நன்கு அறியப்பட்டதாகும், மேலும் IFFI54இல் நமது செழுமையான சினிமா கலாச்சாரம் மற்றும் தனித்துவமான பாரம்பரியங்களை வெளிப்படுத்த தெற்காசியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாவிற்கு அவரை, அவரது மனைவி  கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ் மற்றும் அவர்களது மகனை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம். !! “ என்று  தெரிவித்திருந்தார்