டிக்டாக் முன்னாள் பிரபலங்கள், இந்நாள் யூடியூப் இம்சைகள் என பலர் உள்ளனர். சிலர்தற்போது சிறையில் இருந்தாலும், வெளியில் இருப்பவர்களும் அவ்வப்போது அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டே தான் இருக்கின்றனர். அவர்களில் ஓரிருவர் மட்டும் அவ்வப்போது தப்பித்து, வேறு ஏதாவது ஒரு ரூட்டை பிடித்து அதை வருவாயாக மாற்றி வருகின்றனர். அந்த வரிசையில் ஜி.பி.முத்து, தன்னுடைய சமூக வலைதள செயல்பாட்டை யூடியூப் மூலம் வருவாயாக பெருக்கி வருகிறார்.




ஜிபி முத்துவின் கோமாளித்தனமான வீடியோக்கள், ட்ரெண்டிங்கில் வரும். அந்த அளவிற்கு அவர் பிரபலமானவர். பிக்பாஸ் செல்வார் என்று கூறும் அளவிற்கு ஜி.பி.முத்து, செலிபிரிட்டியாக மாறிவிட்டார். காரணம், அவருக்கு கிடைத்த ரீச் மற்றும் அவர் பேசும் நெல்லை ஸ்லாங். இவை இரண்டும் தான், ஜி.பி.முத்துவை எங்கேயோ கொண்டு சென்று விட்டது. 


ஜி.பி.முத்துவிடம் ஆபாசம் இருக்காதா? என்றால், இருக்கும். ஆனால் அது ரசிக்கும்படியாக மட்டுமே பயன்படுத்தப்படும். பிறரை போன்ற முகம் சுழிக்கும் வகையில் இருக்காது. அதனாலேயே ஜிபி முத்துவை கொண்டாடுகிறார்கள். நண்பர் இறப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2 மாதங்களாக கடுமையான சோகத்திலும், மனஉளைச்சலிலும் இருந்த ஜி.பி.முத்து, நீண்ட இடைவெளிக்கு பின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.


வழக்கம் போல, இதுவும் தனக்கு வந்த கடிதங்களை பிரித்து படிக்கும் வீடியோ அது. நீண்ட நாட்கள் ஓப்பன் செய்யாததால், ஒரு கட்டைப் பை நிறைய கடிதங்கள் குவிந்திருந்தது. அத்தனையும் பிரித்து படிக்க, குறைந்தது ஒரு நாள் வேண்டும். அந்த அளவிற்கு கடிதங்கள் குவிந்திருந்தன. 





கடிதத்தை திறந்தால், வழக்கம் போல ஜி.பி.முத்துவை அர்ச்சனை செய்தும், ஆராதித்தும் கடிதங்கள். கொஞ்சம் கூட கோபப்படாமல், அனைத்தையும் ஜாலியாக பிரித்து படித்து, தானும் சிரித்து, மற்றவர்களையும் சிரிக்க முயற்சித்தார் ஜி.பி.முத்து. ‛கம் பேக் ஜி.பி.முத்து...’ என கமண்ட் செய்தவர்கள் பலர். வழக்கம் போல ,தன்னுடைய கூட்டாளி நண்பர்கள் புடைசூழ ஜி.பி.முத்து நடத்திய கடித சூட்டிங், பல மாதங்களுக்குப் பின் கலகலப்பாக முடிந்தது. 


இதோ அந்த வீடியோ...



அதில் பல குசும்பு வாசகங்கள் இருந்தன. அதில் ஒன்று உங்கள் பார்வைக்காக. ஆண்டனி, பகவதி தெரு, கொத்தமல்லி தெரு என்கிற விலாசத்திலிருந்து வந்த கடிதத்தில், 


‛நான் உங்கள் வீட்டு பிள்ளை... ஊரறிந்த பாதை... நான் செல்லுகின்ற பாதை... அது சன்னி லியோன் பாதை...’ என வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. நீண்ட நாட்களாகவே சன்னி லியோன்-ஜி.பி.முத்து கிசுகிசு பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அவரை வெறுப்பேற்ற, மீண்டும் களமிறங்கியுள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண