இந்தியாவில் பல்வேறு விதமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். அதில் குறிப்பாக ஒருவர் தன்னுடைய திறமை சார்ந்த வீடியோவை பதிவிடும் பட்சத்தில் அது அனைவராலும் பாராட்டப்படும். அந்தவகையில் தற்போது ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. யார் அவர்? என்ன செய்தார்?


 


பாருள் அரோரோ என்பவர் தேசிய அளவில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் பதக்கம் வென்றவர். அத்துடன் அவர் ஒரு ஃபிட்னஸ் மாடலாகவும் இருந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் தளத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் எப்போதும் ஃபிட்னஸ் தொடர்பான வீடியோக்கள் மற்றும் ஜிம்னாஸ்டிக் சாகசம் செய்யும் வீடியோவை அவர் பதிவேற்றி வருகிறார். 


 






அந்த வகையில் சமீபத்தில் அவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பெரிய ஸ்கேர்ட் உடை மற்றும் பெரிய ஹீல்ஸ் செருப்பு ஆகியவற்றை அணிந்துள்ளார். அவற்றை அணிந்து கொண்டு அட்டகாசமாக ஃபிளிப் அடிக்கும் ஜிம்னாஸ்டிக் சாகசத்தை அசத்தலாக செய்கிறார். அந்த வீடியோவில் பின்னணியில் சிநேகிதனே என்ற தமிழ் பாடல் ஒலிக்கிறது. அவரின் இந்த வீடியோவை 2.4 லட்சம் பேருக்கும் மேல் லைக் செய்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோவை ஆச்சரியத்துடன் வியந்து பார்த்து பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அவருடைய வீடியோவை பார்த்து பலரும் தங்களுடைய கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொட


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: ’பிரியாணி என்றால் மட்டும்தானே, எங்கள் ஞாபகம் வரும்?’ இசுலாமியர்களின் வலிகளையும் பேசிய மாநாடு..!