என்னா கிழி...பிரதீப் ரங்கநாதனை கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிய பெண்...வைரலாகும் வீடியோ

இஞ்சினியரிங் படித்து அரியர் வைப்பது தான் கெத்து என படத்தின் டிரைலரில் வந்த காட்சிக்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்

Continues below advertisement

டிராகன்

கோமாளி , லவ் டுடே என இரண்டு படங்களை இயக்கி இளைஞர்களிடம் செம ட்ரெண்ட் ஆனவர் பிரதீப் ரங்கநாதன். அதுவும் லவ் டுடே படத்தில் சேட்டை கொஞ்சம் ஓவர்தான். தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் நடித்துள்ள டிராகன் படம் வரும் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பொறியியல் படிக்க கல்லூரி சேர்ந்து பொறுப்பில்லாமல் சுற்றி , அம்மா அப்பாவின் பணத்தை வீண் அடித்து கடைசியில் மனம் திருந்தி 48 அரியர்களை முடித்து வேலைக்கு போய் செட்டில் ஆவதை டிரைலரில் காட்டியிருந்தார்கள். பலர் இது சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் மாதிரியே இருக்கிறதே என கூறினார்கள். ஆனால் இந்த படம் வித்தியாசமாக இருக்கும் படத்தில் ஒரு ஃபேண்டஸி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். 

Continues below advertisement

டிராகன் படத்திற்கு எதிர்ப்பு

இஞ்சினியரிங் படித்து பல பேர் வேலையே இல்லாமல் இருக்கும் நிலையில் இந்த படத்தில் ஒருத்தன் பெருமையாக 48 அரியர் வைப்பதை சாதனையாக சொல்வது பலரை கடுப்பாக்கியுள்ளது. படத்தில் வருவது போல் எல்லாம் 48 அரியர் வைத்து அதை முடித்து திருந்த முடியாது என இதுபற்றிய நிறைய மீம்கள் பரவின. தற்போது பிரதீப் ரங்கநாதனை கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டி பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது 

Continues below advertisement
Sponsored Links by Taboola