இந்தியாவில் பிக்கில் பால் விளையாட்டு
மும்பையில் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை சேலஞ்சர்ஸ் லீக் 2025 பிக்கில் பால் பந்தையம் நடைபெற்றது. ஐ.பி.எல் போட்டி போலவே இதிலும் ஒவ்வொரு மாநிலத்தின் சாய்பாக ஒரு அணி கலந்துகொண்டது. இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீக்கு சொந்தமான பெங்களூர் பிளேஸர்ஸ் அணி உட்பட மொத்தம் 10 அணிகள் இந்த போட்டியில் கலந்துகொண்டார்கள். இறுதி போட்டியில் சென்னை கூல் கேட்ஸ் அணி டைட்டிலை வென்றது.
பிக்கில் பால் விளையாட்டு கடந்த பத்து ஆண்டுகளில் உலகம் முழுவதும் பிரபலபமாகியுள்ளது. தற்போது இந்தியாவிலும் பிக்கில் பால் நிறைய ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்த விளையாட்டை ப்ரோமோட் செய்ய பிரபலங்களும் முன்வந்துள்ளார்கள். இந்தியாவில் ஐ.பி.எல் போட்டி மாதிரி இந்த விளையாட்டிற்கு பெரிய வரவேற்பும் வர்த்தகமும் இருக்கும் என டிரேட் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பிக்கில் பால் விளையாட்டு உருவான சுவாஸய்மான பின்னணி
உலகம் முழுவதும் பேசப்படும் இந்த விளையாட்டை கண்டுபிடித்தவர்கள் மூன்று தந்தையினர் தான். 1965 ஆம் ஆண்டு அமெரிககவைச் சேர்ந்த ஜோயல் என்பவர் பிக்கில் பால் விளையட்டை முதல்முறையாக கண்டு பிடித்தார். கோடை விடுமுறையில் அவரது குழந்தைகளூக்கு போர் அடித்ததால் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து தனது வீட்டின் பின்பக்கம் உள்ள இடத்தில் பிக்கில் பால் விளையட்டை அவர் கண்டுபிடித்தார்.
பிக்கில் என்பது பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய இரு விளையாட்டையும் சேர்த்தது. பேட்மிண்டன் விளையாடுவதைக் காட்டிலும் இன்னும் சிறிய இடத்தில் விளையாடக்கூடியது இந்த கேம். அதுவுமில்லாமல் இந்த விளையாட்டை அனைத்து வயதினரும் விளையாட முடியும். இதனால் பிக்கில் பால் விளையாட்டு அமெரிக்கா முழுவதும் பிரபலமாகத் தொடங்கியது.
விடுமுறையில் வீட்டின் பின்புறத்தில் விளையாட்டாக இருந்த பிக்கில் பால் . 1976 ஆம் ஆண்டு வாஷிங்டனின் ஒரு பெரிய போட்டியாக ஒருங்கிணைக்கப்பட்டது. பின் பிக் பால் அசோசியேஷன் உருவாகியது. சாம்பியன்ஷிப் போட்டி என கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் வேகமாக பரவும் விளையாட்டாக மாறியுள்ளது.
பிக்கில் பால் விளையாடும் ரூல்ஸ்
இரு போட்டியாளர்கள் எதிரெதிர் நிற்க ஒருவர் பந்தை சர்வ் செய்வார். இந்த இருவரும் 22 அடி மற்றும் 44 அடிகளைக் கொண்ட ஒரு செவ்வக கட்டத்திற்குள் நிற்பார்கள். பந்து சர்வ் செய்யும்போது அது ஒருமுறை தரையில் பட்டு வர வேண்டும். அதை எதிரில் இருப்பவர் தனது ரேக்கட்டால் காற்றில் திருப்பி அடிப்பார். கேம் டேபிள் டென்னிஸ் போல் தொடரும். சிறிய இடத்திற்குள்ளாக விளையாடுவதால் இந்த போட்டியை நீண்டு நேரம் தொடரக்கூடியது அதிக கவனத்தை கோருவதுமாகும். அதே நேரம் இதை ஜாலியாகவும் சிறுவர்களும் வயதானவர்களும் விளையாடக் கூடியதாக இருப்பதால் இந்த விளையாட்டு நிறைய பேரை கவர்ந்துள்ளது.