Vetri Duraisamy: மறைந்த உயிர் நண்பன்! வெற்றி துரைசாமி குடும்பத்துக்கு நேரில் சென்று அஜித் ஆறுதல்!


வெற்றி துரைசாமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நேரில் சென்று நடிகர் அஜித்குமார் ஆறுதல் தெரிவித்துள்ளார்.  வெற்றி துரைசாமியின் நெருங்கிய நண்பரான நடிகர் அஜித்குமார், தனது மனைவி  ஷாலினியுடன் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.மேலும் படிக்க


Actor Sathish: அரசியலில் விஜய் vs உதயநிதி.. நடிகர் சதீஷின் சப்போர்ட் யாருக்கு தெரியுமா?


“வித்தைக்காரன்” படத்தில் சதீஷ் ஹீரோவாகவும், சிம்ரன் குப்தா ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பேசிய சதீஷிடம் சினிமாவில் இருந்து அரசியலில் இருக்கும் விஜய், உதயநிதி ஸ்டாலின் இருவரில் யாருக்கு சப்போர்ட் செய்வீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‘உதயநிதி சகோதரர் ரொம்ப நாளா ஒரே போன் நம்பர் தான் வைத்திருக்கிறார். நடிகராக இருக்கும்போது எப்ப கால் பண்ணாலும் பேசுவார்.  இன்னைக்கு அமைச்சராக இருந்தாலும் எப்ப போன் பண்ணாலும் பேசுகிறார். நான் பார்த்ததில் மிகச்சிறந்த நபர் அவர். அந்த தன்மை அவரை மிகப்பெரிய இடத்துக்கு கொண்டு சேர்க்கும்’ என சொன்னார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும் படிக்க


Ticket Price: தியேட்டர் கட்டணத்தை குறையுங்கள்.. தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை!


தியேட்டரில் டிக்கெட் கட்டணத்தை குறைத்தால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என உரிமையாளர்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 


இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட கண்காட்சியாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.மேலும் படிக்க


Sarfira: சூரரைப் போற்று ரீமேக்.. சூர்யாவுக்கு பதில் அக்‌ஷய்குமார்.. வெளியானது ரிலீஸ் தேதி!


தமிழில் நல்ல வரவேற்பையும் தேசிய விருதையும் பெற்ற 'சூரரைப் போற்று' திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. நெடுமாறன் ராஜாங்கம் என்ற கேரக்டரில் நடிகர் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி நடித்த கதாபாத்திரத்தில் ராதிகா மதன் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யா கேமியோ ரோலிலும், நடிகர் சரத்குமார், பரேஷ் ராவல் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர் என கூறப்படுகிறது. மேலும் படிக்க


Vettaiyan: பண்டிகையில் பட்டையைக் கிளப்பவரும் ரஜினிகாந்த்! வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?


வேட்டையன் படத்தின் 85 விழுக்காடு ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ரஜினிகாந்தின் காட்சிகளைப் படம்பிடிக்க இன்னும் 3 வாரங்கள் மட்டுமே தேவைப்படுவதாகவும், இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஷூட்டிங் நிறைவு பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் 29ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி ரிலீஸாக வேட்டையன் திரைப்படம் திரைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க