Rajinikanth: உத்தரகாண்டில் நண்பர்களுடன் ரஜினி.. வெளியான ஆன்மிகப் பயண புகைப்படங்கள்!

நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவரது புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது

Continues below advertisement

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது வரும் அக்டோபர் மாதம் வேட்டையன் படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு ரஜினி துபாய் கிளம்பிச் சென்று ஒரு வார காலம் தங்கி தனது ஓய்வை கழித்தார். அவர் துபாயில் இருந்த இந்து கோயிலுக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து  ஒரு வார காலம் இமயமலைக்கு ஆன்மிகப் பயணத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார் ரஜினி . 

Continues below advertisement

ஆன்மிக பயணம் சென்ற ரஜினி

தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலை பயணம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினிகாந்த்.  கடந்த ஆண்டு தனது நண்பர்களுடன் பத்ரிநாத் , கேதார்நாத் , பாபாஜி குகை உள்ளிட்ட தலங்களுக்கு சென்று வழிபட்டார். அந்த வகையில் இந்த ஆண்டும் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு ஒருவார கால பயணம் சென்றுள்ளார் ரஜினி.


முதற்கட்டமாக உத்திரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசம் செய்யும் ரஜினியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது , இமயமலை பயணத்தை முடித்து ஜூன் 3 அல்லது 4ஆம் தேதி சென்னை திரும்ப இருக்கிறார் ரஜினிகாந்த். திரும்பி வந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பை அவர் தொடங்குவார் என்று எதிர்பார்க்கலாம். சன் பிச்சர்ஸ் தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 


மேலும் படிக்க : Sathyaraj: "எம்.ஜி.ஆருக்கு டப்பிங் பேசிய ஒரே ஆள் நான்" - சத்யராஜ் பகிர்ந்த தகவல்: எந்தப் படம் தெரியுமா?

Ilaiyaraaja: அரைவேக்காடு நெட்டிசன்களே! இளையராஜா கேட்கும் ராயல்டி பற்றி என்ன தெரியும்! விஷயம் இதுதான்!

Continues below advertisement