சூப்பர்ஹிட் திரைப்படமான ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் வெற்றி விழா கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
வேட்டையாடு விளையாடு ரீ-ரிலீஸ்
2006-ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான படம் வேட்டையாடு விளையாடு. அப்போதே, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த ஜூன் 23-ம் தேதி இந்தப் படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. திரையரங்குகளில் மூன்று வாரங்களை கடந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
வேட்டையாடு விளையாடு ரீ-ரிலீஸ் வெற்றி விழா
இன்னும் இரண்டு ஆண்டுகளில், வேட்டையாடு விளையாடு ரிலீஸ் ஆகி 20 ஆண்டுகள் ஆகப்போகிறது. இந்நிலையில், ரீ-ரிலீஸ் வெற்றி விழாவின் கொண்டாட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளது. இயக்குநர் கெளதம் வாசுதேவ், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் மூவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் ரீமாஸ்டர் செய்யப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியான திரையரங்குகள் சனி, ஞாயிறுகளில் ஹவுஸ்புல் காட்சிகளால் நிறைந்தது. இதனால், மறுவெளியீட்டிலும் கமல்ஹாசன் வசூல் மன்னன் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளார் என்று சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். கெளதம் மேனனின் மேக்கிங் குறித்தும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும், அன்றைய காலக்கட்டத்தில் வெளியான ரஜினி திரைப்படமான ‘படையப்பா’ படத்தின் வசூல் சாதனையை இந்தப் படம் முறியடித்தது. கமல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துப்போனது. இப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான க்ரைம் த்ரில்லர் படங்களில் ஒன்றாக எல்லாராலும் பாராட்டப்பட்டது.
மேலும், பெண்களை கடத்தி கொலை செய்யும் சீரியல் கொலைகாரர்கள், அவர்களை பிடிக்க செல்லும் ராகவன் எனும் நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு ஏற்படும் இழப்புகள் என சஸ்பென்ஸ் விருந்து வைத்த இத்திரைப்படம், மறுபுறம் தன்பால் ஈர்ப்பாளர்களாக வில்லன்களைக் காண்பித்ததற்காக கடும் எதிர்ப்புகளையும் பெற்றது. இதை ரீ-ரிலீஸ் செய்யும்போதாவது, தன்பால் ஈர்பாளர்கள் குறித்து டயலாக்- களை மாற்றியிருர்ந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் வாசிக்க..